TamilSaaga

“சிங்கப்பூரில் பேருந்து ஓட்டுநரை தாக்கிய முதியவர்” : நீதிமன்றத்தில் ஆஜராகாததால் கைது வாரண்ட் பிறப்பிப்பு

சிங்கப்பூரில் கடந்த மாதம் பேருந்து ஓட்டுநரை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட முதியவருக்கு இன்று புதன்கிழமை (டிசம்பர் 1) மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் தொடர்பான குற்றம் மற்றும் பெருந்தொற்று தடுப்பு தற்காலிக நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் ஒரு குற்றத்திற்காக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மாவட்ட நீதிபதி டெரன்ஸ் டே முன் ஆஜராகத் தவறிவிட்டார்.

அவரது கைது உத்தரவு தொடர்பான விஷயங்கள் மீதான மறுஆய்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. அஹ்மத் மற்றும் அஜிஸ் கான் ஷேர் கான் (வயது 61), கடந்த நவம்பர் 2ம் தேதி காலை 11 மணியளவில் பேருந்து சேவை 2-ல் ஏறியபோது அவர்கள் முகமூடியை சரியாக அணியத் தவறியதாகக் கூறப்படுகிறது. உடனடியாக பேருந்து ஓட்டுநர் ஹியூ கிம் கியோங் அவர்களிடம் இந்த விஷயத்தை எடுத்துரைத்தபோது சிங்கப்பூரர்கள் இருவரும் கோவமடைந்தனர் என்று காவல்துறை முந்தைய அறிக்கையில் கூறியது குறிப்பிடத்தக்கது.

பின்னர் அந்த இருவரும் திரு ஹியூ மீது பலத்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர், இதனால் அவருக்கு நாசி எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்படுகிறது. இதனையடுத்து அன்றைய தினம் போலீசார் அகமது மற்றும் கானை கைது செய்தனர். சம்பவம் நடந்த அடுத்த நாள் நவம்பர் 3ம் தேதி, அவர்கள் ஒவ்வொருவரும் தானாக முன்வந்து திரு ஹூவைக் கடுமையாக காயப்படுத்தியதாக அவர்கள் மீது ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

கான் மீது தாக்குதல் தவிர, ஓட்டுநர் திரு. ஹியூவின் பணப்பையை திருடியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த பணப்பையில் 700 வெள்ளி ரொக்கம் உட்பட பொருட்கள் இருந்தன என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.

Related posts