TamilSaaga

சிங்கப்பூரில் 3 குழந்தைகளை தவிக்கவிட்டுச் சென்ற ஊழியர்.. கடமையே கண்ணாக இருந்து கடைசி நேரத்தில் உயிரை விட்ட சோகம்!

சிங்கப்பூரரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக். 9) அன்று காலை ஹூகாங் டிப்போவுக்கு வெளியே மரத்தில் SBS transit மோதியதில் 54 வயதான பேருந்து ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த செய்தியை நேற்று (அக்.10) நமது தமிழ் சாகா தளத்தில் வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில், அவர் குறித்த முழு விவரங்களும் இன்று வெளியாகியுள்ளது.

இதுகுறித்து SBS Transit’s துணைத் தலைவர் Grace Wu கூறுகையில், “உயிரிழந்த SBS பேருந்தின் கேப்டன் சிங்கப்பூரைச் சேர்ந்தவர். அவரது பெயர் Liu Shanlong” என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் (NTUC) உதவிப் பொதுச் செயலாளருமான மெல்வின் யோங், இந்த விபத்து குறித்து தனது ஃபேஸ்புக் பதிவில் வெளியிட்டுள்ள தகவலில், “உயிரிழந்த Liu Shanlong 20 வருடங்களாக SBS பேருந்தை இயக்கி வருகிறார். மெச்ச அனுபவம் வாய்ந்தவர்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களே… எம்ஆர்டி செலவை எளிதாக குறைக்க.. இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க

அவர் ஒரு தொழிற்சங்க பிரதிநிதி மட்டுமல்ல, NTWU தலைவராகவும் இருந்தார், அங்கு அவர் தனது சக தொழிலாளர்களால் பெரிதும் “மதிக்கப்பட்டவர்”. அவரது கடுமையான அயராத உழைப்பு மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தது. இதனாலேயே அவரை சக ஊழியர்கள் மதித்தனர்.

அதுமட்டுமின்றி அவருக்கு ஒரு மனைவியும், பள்ளிக்கு செல்லும் வயதில் மூன்று பிள்ளைகளும் உள்ளனர். ஆனால், அனைவரையும் தவிக்கவிட்டு அவர் சென்றுவிட்டார்.

சம்பவத்தன்று, பயணிகள் யாருமே இல்லாத பேருந்தை டிப்போவில் நிறுத்த அக்.9 அன்று அதிகாலை 2.40 மணிக்கு வந்து கொண்டிருந்த போது, பேருந்து அவரது கட்டுப்பாட்டை மீறி சென்றதால், மரத்தின் மீது அதிபயங்கரமாக மோதியதில், சீட்டில் இருந்தபடியே அவர் தனது உயிரை விட்டுள்ளார்.

அந்த அதிகாலை நேரத்திலும், தனது பணியில் கண்ணும் கருத்துமாக இருந்த Liu, கடைசி நேரத்தில் விபத்தில் சிக்கி, தனது மூன்று சிறு பிள்ளைகளையும், மனைவியையும் தவிக்கவிட்டுச் சென்றுள்ளார்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts