TamilSaaga

பிரான்ஸ் நாட்டின் மருத்துவத்துறை : ஜனாதிபதியின் அறிவிப்பால் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு

தற்போது உலக அளவில் பரவி வரும் இந்த கிருமித்தொற்றுக்கு ஒரே தீர்வாக தற்போது விளங்குவது தடுப்பூசிகள் மட்டுமே என்பது பலரும் அறிந்த உண்மை. இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் மருத்துவத் துறையை சேர்ந்த அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டின் ஜனாதிபதி இமானுவேல் தற்போது தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மருத்துவத்துறையில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் தென்னாப்பிரிக்க நாட்டில் இருந்து பரவிய பீட்டா வகை வைரஸ் தற்போது பிரான்ஸ் நாட்டில் தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தகுதி உள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதியிலிருந்து மருத்துவத் துறையினருக்கு கட்டாய தடுப்பூசி போடப்படும் பணி தொடங்க உள்ளது. மேலும் அவர்கள் தடுப்பூசி போடத் தவறினால் அவர்களுக்கு ஊழியம் வழங்கப்படமாட்டாது என்றும் மேலும் அவர்களுக்கு வேலை செய்ய அனுமதி மறுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் பிரான்ஸ் நாட்டின் Marseille மாவட்டத்தை சேர்ந்த மருத்துவத்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts