TamilSaaga

பொறியியல், டிப்ளமோ, மற்றும் தொழிற்கல்வி படித்தவர்களுக்கு MNC நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள்! உடனே விண்ணப்பித்திடுங்கள்!

உலகம் முழுவதும் உள்ள மருத்துவமனை, பரிசோதனை மையங்கள்ல பல விதமான தொழில்நுட்பக் கருவிகள் பயன்படுத்தப்படுது. ஆய்வகங்கள்ல பல விதமான பரிசோதனைகளுக்கு, மருத்துவமனைகள்ல உயிர் காக்கும் தொழில் நுட்பங்கள் என மருத்துவ உலகில் தொழில்நுட்பம் மிக பிரம்மாண்டமா வளந்திருக்குனே சொல்லலாம்.

மற்ற இடங்கள்ல உள்ள தொழில்நுட்பங்களை விட மருத்துவத்துல பயன்படுத்தப்படுற தொழில்நுட்பங்கள் மிக நுணுக்கமானவை. ரொம்ப முக்கியமானவையும் கூட அப்படி பட்ட தொழில் நுட்பங்களை உருவாக்குவதும் அதற்கு மேலும் சேவைகளை வழங்கும் நிறுவனம் தான் Danaher.

உலகம் முழுவதும் 15 க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்கள் மூலம் பரிசோதனை தொழில்நுட்பம், உயிர்காக்கும் தொழில்நுட்பம் என அனைத்திலும் இந்த நிறுவனம் தொழில்நுட்பங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒருவேளை நீங்களும் உயிர் தொழில்நுட்பவியல் (Bio Technology) பயின்றவரா இருந்தீங்கன்னா இந்த நிறுவனம் உங்கள் எதிர்கால பணித்தளமா இருக்க பல வேலைகள் இங்க காத்திருக்கு!

முதலில் இந்த நிறுவனத்தின் சலுகைகள் குறித்து பாப்போம்! உலகின் அனைத்து நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களின் நலனுக்காக பல சலுகைகளை வழங்குவது உண்டு. அதே போல Danaher நிறுவனத்திலும் சலுகைகள் உண்டு!

1. உயர்ந்த ஊதியம்
2. குழந்தைகளின் படிப்புக்கு ஏற்ற சலுகைகள்
3. குறிப்பிட்ட செலவுகளில் தள்ளுபடி
4. மருத்துவ உதவிகள் மற்றும் காப்பீடுகள்
5. மகப்பேறு விடுமுறை உள்ளிட்ட பல குடும்ப நல சலுகைகள்

என பல விதமான சலுகைகளை இந்த நிறுவனம் வழங்குகிறது. இது ஒரு பன்னாட்டு நிறுவனம் என்பதால் ஊழியர்களின் நலனை முதன்மையாகக் கொண்டு ஒவ்வொரு முன்னேற்றத்திற்கும் பல சலுகைகளை வழங்குகிறது.

இது குறித்து மேலும் அறிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்-கை க்ளிக் செய்து இந்த நிறுவனத்தில் மேலும் பல உற்சாகமான சலுகைகளைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்! Danaher Employee Benefits

தற்பொழுது தங்கள் நிறுவனத்தில் பணிபுரிய பல வேலைவாய்ப்புகளை Danaher அறிவித்துள்ளது. அதற்கான விவரங்கள் கீழே!

முன்பே குறிப்பிட்டது போல உலகம் முழுவதும் ஏறத்தாழ 15 பிரிவுகளைக் கொண்ட இந்த நிறுவனத்தில் சிங்கப்பூர்-ல் 5 பிரிவுகளில் 20-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உள்ளன.

அதில் குறிப்பிட்ட சில வேலை வாய்ப்புகளைப் பற்றி அறிந்துகொள்வோம்!

1. Beckman Coulter Diagnostics

Field Service Engineer – வாடிக்கையாளரின் புகார்களுக்கு இணங்க அவர்களுக்கு உடனடி சர்விஸ் அல்லது தொழில்நுட்பம் சார்ந்த உதவிகள் போன்றவற்றை செய்வதே இந்த பணி. பொறியியல் பட்டம் மற்றும் இது சார்ந்த துறையில் 3 வருட அனுபவம் போன்றவை இந்த பணிக்கான தகுதி ஆகும்.

2. Cephid

Field Service Engineer – வாடிக்கையாளர்களின் இடங்களுக்கு சென்று அங்கு உள்ள தொழில்நுட்பக் கருவிகளில் ஏதேனும் பழுது இருந்தால் அதனை சரி செய்வதும், தொடர்ச்சியான பராமரிப்பு பரிசோதனைகளை மேற்கொள்வதும் இந்தப் பணியின் முக்கிய பொறுப்பாகும். அது தவிர வாடிக்கையாளர்களுக்கு தொழில்நுட்பங்களைக் கையாள்வதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அதற்கான ஆலோசனைகளை வழங்குவதும் இந்த பணியின் கடமையாகும். இதற்கான கல்வித்தகுதி உயிர் தொழில்நுட்பவியலில் பொறியியல் பட்டம் மற்றும் 4-6 வருட முன்அனுபவம்.

Field Application Engineer – வாடிக்கையாளர்களின் இடங்களுக்கு சென்று Cephid உபகரணங்களை நிறுவுவதும் அது சார்ந்த தொழில்நுட்பங்களைக் குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிப்பதும் இந்த பணியின் முக்கிய பொறுப்பாகும். மேலும் Cephid தொழில்நுட்பங்களின் மென்பொருள் மற்றும் உபகரங்களைக் குறித்த உதவி மற்றும் ஆலோசனைகளை வழங்க வேண்டும். இதற்கான கல்வித்தகுதி உயிர் தொழில்நுட்பவியலில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் மற்றும் 3 முதல் 5 வருட அனுபவம்.

3. Leica Microsystems

Field Service Engineer – மேலே குறிப்பிட்டது போல தொழில்நுட்பக் கருவிகளை சரி செய்வதும் அதற்க்கான பராமரிப்பு உதவிகளை வழங்குவதும் இந்த பணியின் முக்கிய பொறுப்பாகும். இதற்கான கல்வித்தகுதி மின்னியல் அல்லது மின்னணுவியல் துறையில் (Electrical Or Electronics) டிப்ளமோ பட்டம்.

4) Pall

Production Associate II, Production Technician – மருத்துவ சாதனங்களின் உற்பத்திப் பிரிவில் பணிபுரிவதே இந்த வேலை. அங்கு உள்ள உற்பத்தி உபகரணங்களை கவனமாகக் கையாள்வதுடன் உற்பத்தியைப் பெருக்குவதும் இந்த பணியின் முக்கிய பொறுப்பாகும். இதற்கான கல்வித்தகுதி உயர்நிலை பள்ளிப்படிப்பு (Secondary educated graduate) மற்றும் 2 வருட முன் அனுபவம்.

QC Analyst – உற்பத்தி செய்யப்பட்ட மருத்துவ சாதனங்களை தொடர்ச்சியான பரிசோதனைகளுக்கு உட்படுத்தி அதன் தரத்தை உறுதி செய்வதே இந்த பணியின் முக்கிய பொறுப்பாகும். இதற்க்கான கல்வித்தகுதி அறிவியல் பிரிவில் டிப்ளமோ அல்லது ஏதேனும் தொழில் பயிற்சி சான்றிதழ்.

மேலே பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிட்ட சில பணிகள் மட்டுமே! Danher நிறுவனத்தின் மேலும் பல வேலைவாய்ப்புகளைப் பற்றி அறிந்துகொள்ள கேளே உள்ள லிங்க்-கை பயன்படுத்தவும்!

https://jobs.danaher.com/global/en/search-results

இந்த பக்கத்தில் நுழைந்தவுடன் இடதுபுறத்தில் நாடு, வேலை, பிரிவு நகரம் என பல தேர்வுகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் உங்களுக்கான தேர்வுகளை தேர்ந்தெடுத்தவுடன் அதற்கான வேலை வாய்ப்புகள் வலது புறத்தில் தோன்றும்.

அந்த வேலைகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்ற விவரங்கள்:

• மேலே குறிப்பிட்டது போல் வலதுபுறம் தோன்றும் வேலை வாய்ப்புகளும் உங்களுக்கானதை தேர்வு செய்யவும்.

• உள்ளே சென்றவுடன் வேலை முறை அதற்கான கல்வித்தகுதி போன்ற பல தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்தையும் கவனமாக ஆராய்ந்து பின்னர் மேலே வலது புறத்தில் உள்ள Apply Now என்ற பொத்தானை க்ளிக் செய்யவும்.

• அங்கு கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக உள்ளீடு செய்து அதனுடன் உங்கள் சுய விவரத்தையும் இணைத்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் நேர்காணல் உள்ளிட்ட செயல்பாடுகள் நடைபெறும். மேலே உள்ள வழிகாட்டுதலின்படி Danher குடும்பத்தில் நீங்களும் உறுப்பினராய் இணைய வாழ்த்துகள்!

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts