TamilSaaga

“சிங்கப்பூரில் வேலைக்கு ஆட்கள் உடனடியாக தேவை” – வெளிப்படையாக அறிவித்த MOH – வெளிநாட்டு ஊழியர்கள் விண்ணப்பிக்கலாமா?

சிங்கப்பூரில் சமீபத்திய கோவிட்-19 வழக்குகளின் அதிகரிப்பு காரணமாக அதிக அளவிலான மனிதவளத்தைத் தற்போது தேடிவருவதாக சிங்கப்பூர் ஹெல்த்கேர் கார்ப்ஸ் (SHC) தெரிவித்துள்ளது. இதனையடுத்து தேவையான மனிதவளத்தை நிரப்ப சுகாதார அமைச்சகம் (MOH) SHCல் முன்பு பதிவு செய்த நபர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. “அதிகரிக்கும் கோவிட்-19 வழக்குகள் காரணமாக, கோவிட்-19 செயல்பாடுகளின் வேகத்தை அதிகரிக்க எங்களுக்கு “மனிதவளம்” அவசரமாகத் தேவைப்படுகிறது” என்று MOH வெளியிட்ட ஒரு குறுஞ்செய்தியில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் வெள்ள அபாய எச்சரிக்கை.. அடுத்த ஒரு வாரம் கவனமாக இருக்க வேண்டுகோள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கோவிட்-19 தொடர்பான செயல்பாடுகள் மற்றும் சமூகப் பராமரிப்பில் சுகாதார நிபுணர்களுக்கு ஆதரவளிப்பதற்காகத் தான் SHC உருவாக்கப்பட்டது. இந்நிலையில் கார்ப் தற்போது சுகாதார அனுபவம் உள்ள அல்லது இல்லாத நபர்களை பணியமர்த்த தயாராக உள்ளது. மேலும் பணியமர்த்தலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு பயிற்சியும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. MOH அனுப்பிய மின்னஞ்சலின் படி, மருத்துவமனைகள் மற்றும் சமூக பராமரிப்பு வசதிகளில் கோவிட்-19 நேர்மறை நோயாளிகளை நிர்வகித்தல் உள்ளிட்ட வேலைகளுக்கு ஆட்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று கூறியுள்ளது.

“மேலும் இந்த பணியமர்த்துதலில் சில வேலைகளுக்கு அந்தந்த தனிநபர்கள் முன்னதாக சுகாதாரப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும், அல்லது அது தொடர்புடைய தொழில்முறை வாரியங்களிலிருந்து செல்லுபடியாகும் பயிற்சி சான்றிதழை வைத்திருக்க வேண்டும்” என்று MOHன் மின்னஞ்சல் தெரிவித்தது.

ஒரு படிவத்தில், விண்ணப்பதாரர்கள் அவர்களின் வேலை விவரம், சுகாதார அனுபவம், தற்போது வேலையில் உள்ளார்களா அல்லது இல்லையா போன்ற கேள்விகளுக்கு மற்றும் அவர்களது தடுப்பூசி நிலைப்பாட்டை பற்றியும் தகவல்கள் கேட்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

“என் புருஷன், புள்ளைங்களே என்னை வெறுக்குறாங்க”.. சிங்கப்பூரில் அலட்சிய குணத்தால் 20,000 டாலரை இழந்த அப்பாவி பெண் – “Google Search” மூலம் “விபூதி” அடித்த ஆசாமி

கோவிட்-19க்கு எதிரான சிங்கப்பூரின் போராட்டத்தில் சுகாதாரப் பணியாளர்களுக்கு ஆதரவாக SG Health Care Corps அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மனிதவள பற்றாக்குறை நிலவுவதால் முன்னாள் மற்றும் தற்போதைய சுகாதாரப் பணியாளர்கள் தயார் நிலையில் இருக்குமாறு SHCயால் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளனர். இந்த பணிகளுக்கு உள்ளூரில் உள்ள சுகாதார பணியாளர்கள் நிச்சயம் விண்ணப்பிக்கலாம். தற்போதைக்கு இந்த சுகாதார பணியாளர்கள் பணிக்கு வெளிநாட்டு ஊழியர்கள் விண்ணப்பிக்க முடியாது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts