எஃப்பிடிஏ தற்காப்பு ஒப்பந்தத்தில் உள்ள ஐந்து நாடுகள் சேர்ந்த குழு அதன் பொன் விழாவினை சிறப்பாக கொண்டாட பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த கொண்டாட்டத்திம் பகுதியாக அஞ்சல் தலை வெளியீடு, இராணுவ பயிற்சி நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்துள்ளன.
சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரிட்டன் மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் இந்த குழுவிம் 1971ம் ஆண்டு ஒப்பந்தத்தை உருவாக்கி இணைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனின் காலணி ஆதிக்கத்தில் இருந்து சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்றவை வெளியேறும் போது அவைகள் பாதுகாப்பிற்காக இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.
இந்த ஒப்பந்த நாடுகள் இராணுவ பாதுகாப்பை மேம்படுத்துவதுடன் இணைய பாதுகாப்பையும் உறுதிபடுத்தும் படிப்படியான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன என்பது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.