TamilSaaga

Exclusive : சிங்கப்பூரில் வேலை செய்யும் வெளிநாட்டவர்கள், இங்கு தொழில் தொடங்க முடியுமா? – சிறப்பு பார்வை

என்னதான் நாம் வேலை செய்து மாதம்தோறும் சம்பளம் வாங்கினாலும் நமக்கேன ஒரு சொந்த தொழில் இருந்தால் அதில் உள்ள நிம்மதியே வேறு. இன்று பல உயரங்களை எட்டியுள்ள பலரும் தங்கள் சொந்த முயற்சியில் உருவாக்கிய தொழில் மூலம் முன்னேறிவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : நம்ம சிங்கப்பூர் : “எதுவுமே இல்லை” என்பதிலிருந்து “எதுவும் சாத்தியம்” என்பதை சாதித்துக் காட்டிய நாடு

“நீ தூங்கும் நேரத்திலும், உனக்கு வருமானம் கிடைக்கும் வழியை நீ கண்டறியாவிட்டால் உன் வாழ்நாளின் இறுதிவரை நீ உழைத்துக்கொண்டே இருக்கவேண்டும்” என்று பிரபல அமெரிக்கா தொழிலதிபர் Warner Buffet தெரிவித்துள்ளார். அந்த தொழிலதிபர் சொன்னதில் உலகில் உள்ள எவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை என்பது நிதர்சனமான உண்மை. அதே போல “கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்ள” இது நமது தமிழர்கள் சொன்ன பெண்மொழிகள். இதனால் ஒரு தனிமனிதன் தனது வாழ்வு வளர்ச்சி பெறுவதற்கு அவன் அனுதினம் கடுமையாக உழைக்கும் அதேநேரத்தில் கூடுதலாக ஒரு தொழிலை தன் கைவசம் வைத்திருந்தால் அவன் வாழ்நாள் முழுவதும் நலமுடன் வாழலாம்.

இந்நிலையில் வெளிநாடுகளில் அதிலும் குறிப்பாக சிங்கப்பூரில், வெளிநாடுகளில் இருந்து வந்து வேலை செய்பவர்கள் இங்கு தனியாக தொழில் தொடங்க முடியுமா?. வெளிநாடுகளில் இருந்து முறையான பாஸ் வைத்துக்கொண்டு அவர்களால் இன்று பிசினஸ் செய்யமுடியுமா? என்பதை குறித்து தெளிவாக இந்த பதிவில் நாம் காணலாம்.

முறையான ஆவணம் மற்றும் பாஸ் இருந்தால் வெளிநாட்டு ஊழியர்கள் இங்கு தொழில் தொடங்க சிங்கப்பூர் அரசு அவர்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் மனதார செய்யும் என்பது தான் உண்மை. ஆனால் அதற்கு என்னென்ன வேண்டும். முதலில் சிங்கப்பூரில் பணி செய்துவரும் வெளிநாட்டு ஊழியர்களில் 99 சதவீதம் பேர் தங்களால் இங்கு தொழில் தொடங்க முடியாது என்று தான் கருதுகின்றனர், ஆனால் அது உண்மையில்லை.

சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூருக்கு Employment Pass, Work Permit மற்றும் S Pass ஆகிய முறைகளில் இங்கு வருகின்றனர். இதில் Work Permit மற்றும் S Pass வைத்திருப்பவர்களால் இங்கு நிச்சயம் தொழில் செய்ய முடியாது அதற்கு அனுமதியும் சிங்கப்பூர் அரசு வழங்குவதில்லை. ஆனால் Employment Pass மூலம் சிங்கப்பூர் வருபவர்கள் நிச்சயம் இங்கு தொழில் தொடங்க முடியும் அதற்கு அரசும் அனுமதி அளிக்கின்றது. சிங்கப்பூரின் மனிதவள அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்திலும் இதற்கான வழிகள் குறித்தும் தெளிவான தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் Employment Pass வைத்திருக்கும் பட்சத்தில் முதலில் நீங்கள் தற்போது வேலைசெய்து வரும் முதலாளிகளிடம் Opinion Application Certificate என்ற application ஒன்றில் கையொப்பம் பெறவேண்டும். இது நீங்கள் தொழில் செய்ய அவருக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்பதாகும். இதனை பெற்று அவர்கள் நிச்சயம் சிங்கப்பூரில் சொந்த தொழில் தொடங்கலாம். மேலும் இதுகுறித்து உங்களுக்கு கூடுதல் தகவல்கள் தேவைப்படும் பட்சத்தில் சிங்கப்பூரில் உள்ள ஒரு ஆடிட்டர் அல்லது வேலைவாய்ப்பு ஆலோசகரை அணுகி உங்களுக்கு தேவையான தகவலை பெறலாம்.

அதேசமயம் நீங்கள் Employment Pass வைத்திருக்கும் பட்சத்திலும் நீங்கள் வேலைசெய்து வரும் முதலாளிகளுக்கு தெரியாமல் தொழில் தொடங்கினாள் எதிர்காலத்தில் நிச்சயம் உங்களுக்கு அது பிரச்சனையாகவே முடியும் என்பதில் சந்தேகமில்லை. ஆகையால் அதை தவிர்த்து முறையான ஆவணங்களை பெற்று தொழில் செய்தால் நன்மைகள் பயக்கும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts