சிங்கப்பூரில் கடந்த மாதம் ஜனவரி 29 அன்று காலை பிளாக் 39 டெலோக் பிளாங்கா ரைஸில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக 73 வயது முதியவர் ஒருவர் கைது அன்றைய தினம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அந்த தீயில் சிக்கி காயமடைந்த 48 வயது பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. SCDF வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு தீ விபத்து குறித்து எச்சரிக்கப்பட்டதாகவும், விஷயமறிந்த சம்பவ இடத்திற்கு SCDF சென்றபோது, அந்த குடியிருப்பு பகுதியில் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த குடியிருப்பின் 10 வது மாடியில் உள்ள ஒரு வீடு முழுவதுமாக தீக்கிரையானதாகவும் கூறப்பட்டது.
சுதந்திர வாழ்க்கை எப்போது? விலங்குகளா நாங்கள்? – சிங்கப்பூரில் வெளிநாட்டு தொழிலாளர்கள் வேதனை.. ஏன்?
அதே பிளாக்கில் வசிக்கும் மற்றும் இறந்தவரின் நண்பரான கெவின் ஹோ என்பவரிடமிருந்து மதர்ஷிப் செய்தி நிறுவனம் கீழ்காணும் இந்த செய்தியைப் பெற்றுள்ளது.
கடந்த ஜனவரி 29-ம் தேதி அதிகாலையில் கொழுந்துவிட்டு எரிந்த தீயால் முற்றிலும் எரிந்த 10-வது மாடிக்கு நேர் மேலே 11-வது மாடியில் உள்ள வீட்டில் தான் Emma வசித்து வந்தார். சம்பவத்தின் போது அந்த வீட்டில் Emma மட்டுமே இருந்ததாக மதர்ஷிப்பிடம் ஹோ கூறினார். அந்த வீட்டில் மீதமுள்ள மக்கள் – அதாவது Emma-வின் முதலாளி, மைமி சென், சென்னின் மகன் மற்றும் வயது வந்த குத்தகைதாரர் ஆகிய அனைவரும் தற்போது வெளிநாட்டில் உள்ளனர். எனவே, இந்த விபத்து குறித்து விஷயங்களை மேற்பார்வையிட முதலாளி சென் மூலம் ஹோ கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து SCDF வெளியிட்ட பதிவில் தீக்கு நேர் மேலே உள்ள ஒரு வீட்டில் 48 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் தரையில் கிடப்பதை தீயணைப்பு வீரர்கள் கண்டனர் என்றும். அவருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார் என்றும் வெள்ளியன்று வெளியான பதிவில் SCDF தெரிவித்தது. மேலும் மற்றொரு 25 வயதான பெண் புகையை உள்ளிழுத்தால் அவருக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டது. ஆனால் சுயநினைவுடன் காணப்பட்டார், இருப்பினும் அவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதே போல முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 280 பேர் அந்த பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
2018ம் ஆண்டு இங்கு பணியமர்த்தப்பட்ட Emma, தங்கள் வீட்டில் ஒருவராக தான் வாழ்ந்து வந்தார் என்றும். அவரை போன்ற நம்பிக்கையான ஒரு பணியாளரை நாங்கள் கண்டதில்லை என்று பலரும் கூறியுள்ளார். இந்தோனேஷியா நாட்டில் 17 வயது மகளுடன் வசித்து வந்த Emma தற்போது அவரை தவிக்க விட்டு சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Emmaவின் உடல் தற்போது தாயகம் அனுப்பப்படுகிறது.
Emmaவின் குடும்பத்திற்காக தற்போது நிதி வசூல் செய்யப்பட்டு வருவதாகவும் ஹோ தெரிவித்துள்ளார். 30,000 வெள்ளி அளவுக்கு நிதியினை திரட்ட அவர்கள் முடிவு செய்துள்ளனர்.