TamilSaaga

சிங்கப்பூரில் கட்டுக்கட்டாக சிக்கிய போதைப்பொருள்.. “4 வெளிநாட்டவர்கள் கைது” – குற்றம் நிரூபணமானால் தூக்கு நிச்சயம்!

சிங்கப்பூரின் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) கடந்த 2022 ஜூலை 18 முதல் ஜூலை 22 வரை நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் 100 பேரைக் கைது செய்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மொத போதைப்பொருட்களின் சந்தை மதிப்பு சுமார் S$4,70,000 என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 194 கிராம் ஹெராயின், 657 கிராம் “ICE”, 9,339 கிராம் கஞ்சா, 104 கிராம் கெட்டமைன், 7 கிராம் நியூ சைக்கோஆக்டிவ் பொருட்கள் (NPS), 236 கிராம் “Ecstasy” மாத்திரைகள், ஒரு Erimin-5 மாத்திரைகள் (ஒரு LSDlyerg, ஒரு மாத்திரை டைதிலாமைடு) மற்றும் ஆறு பாட்டில் திரவம் GHB (காமா-ஹைட்ராக்ஸிபியூட்ரேட்) கொண்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

9,339 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்ட நிலையில் இதைக்கொண்டு, ஒரு வாரத்திற்கு சுமார் 1,330 பேருக்கு அவர்களால் போதைப்பொருட்களை அளிக்க முடியும் என்றும் CNBன் செய்தி வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. CNB பூன் லே, சாங்கி, செங்காங் மற்றும் தோவா பயோ போன்ற பகுதிகளில் சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த ஜூலை 21 அன்று லோரோங் 7 கெய்லாங் அருகே 22 முதல் 30 வயதுடைய நான்கு வெளிநாட்டு ஆண்களை அதிகாரிகள் கைது செய்தனர். 25 வயதுடைய ஆண் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க முயன்றார், இருப்பினும் வெகு சில நிமிடங்களில் CNB அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 19,900 சிங்கப்பூர் டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

“ரொம்ப கோவக்காரரா இருப்பார் போல”.. சிங்கப்பூரில் ஓடும் காரில் மனைவியோடு சண்டை – கடுப்பில் “காரிலிருந்து குதித்த கணவன்”

அதேபோல 30 வயதுடைய வெளிநாட்டு பிரஜை ஒருவரிடமிருந்து சுமார் 3 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. அதே பகுதியில் யாருக்கும் தெரியாமல் தூக்கி எறியப்பட்டதாகக் கூறப்படும் ஒரு மூட்டையையும் அதிகாரிகள் மீட்டனர், அதில் S$14,630 பணம் இருந்தது.

போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் 5-வது பிரிவின் கீழ், ஒரு நபர் சிங்கப்பூரில் இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும், அவர் சார்பாகவோ அல்லது வேறு எந்த நபரின் சார்பாகவோ கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருளைக் கடத்துவது குற்றமாகும்.

கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருட்களை எடுத்து செல்ல உதவுவது, அல்லது கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருளை கடத்துவதற்கு அல்லது அதன் நோக்கத்திற்காக ஆயத்தமாக ஏதேனும் செயலைச் செய்ய முன்வருதல் ஆகியவை சிங்கப்பூர் சட்டப்படி குற்றமே” என்று CNB கூறியது.

கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேக நபர்களிடமும் போதைப்பொருள் நடவடிக்கைகள் தொடர்பிலான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

ஒரு நபர் 15 கிராம் தூய ஹெராயின் (டயமார்ஃபின்), 250 கிராம் மெத்தாம்பேட்டமைன் அல்லது 500 கிராம் கஞ்சாவை கடத்தியதாகக் கண்டறியப்பட்டால், அந்த ஆண் அல்லது அந்த பெண் கட்டாய மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts