TamilSaaga

“திரும்ப வந்துட்டேன்னு சொல்லு”… மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு செயல்பாட்டிற்கு வரும் சாங்கி விமான நிலையத்தின் டெர்மினல் 2…

மூன்றரை ஆண்டு விரிவாக்க பணிகளுக்கு பிறகு சாங்கி விமான நிலையத்தின் இரண்டாவது முனையம் வெற்றிகரமாக இன்று செயல்பட தொடங்கி இருக்கின்றது. புதிதாக புதுப்பிக்கப்பட்ட முனையத்தில் 15,500 சதுர மீட்டர் பரப்பளவு கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. தற்பொழுது பகுதி அளவு திறக்கப்பட்டுள்ள முனையமானது அக்டோபர் மாத இறுதிக்குள் முழுமையாக திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அடுத்த வாரங்களில் இப்பகுதியில் கடைகள் மற்றும் உணவகங்கள் திறக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஜெர்மன், பங்களாதேஷ், இலங்கை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள், ஸ்விஸ் இன்டர்நேஷனல் விமான நிறுவனத்தின் விமானங்கள் இந்த முனையத்தின் வடக்கு பகுதியில் இருந்து முதல் கட்டமாக செயல்பட தொடங்கும் என சாங்கி விமான நிலைய அதிகார குழு தெரிவித்துள்ளது. புதிதாக திறக்கப்பட்டுள்ள முனையத்தின் மூலம் சிங்கப்பூருக்கு வரும் மொத்த பயணிகளின் எண்ணிக்கை 90 மில்லியனை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரண்டாம் நிலையத்தில் மட்டும் பயணிகளின் எண்ணிக்கையானது 28 மில்லியனை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கொரோனா நோய் தொற்றுக்கு முன்பு இருந்த காலத்தை ஒப்பிடும் பொழுது தற்பொழுது விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை 87 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். எனவே புது முனையம் திறக்கப்பட்டதன் காரணமாக பயணிகளின் எண்ணிக்கையானது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பயணிகளின் வசதிக்காக இரண்டாம் இணையத்தில் பல்வேறு தானியங்கி இயந்திரங்கள் இடம் பெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்

Related posts