TamilSaaga

“காலம் கனிந்தது கதவுகள் திறந்தது” : புது BMW கார் – மகிழ்ச்சியோடு புகைப்படத்தை வெளியிட்ட தாடி பாலாஜி

நடிகர் பாலாஜி என்று சொன்னால் சற்று யோசிக்கும் மக்கள் தாடி பாலாஜி என்று கூறினால் சற்றும் யோசிக்காமல் அவரை நினைளவில்கொள்ளவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த, தளபதி விஜய் மற்றும் தல அஜித்துடன் நகைச்சுவகை கதாபாத்திரம் பாத்திரம் ஏற்று நடித்துள்ளார் பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மறைந்த சின்னக்கலைவனர் விவேக் அவர்கள் மருந்துகள் விற்கும் நபராக வரும்போது அவரிடம் தனக்கு உள்ள நோய்களை குறித்து கூறும் தாடி பாலாஜியின் அந்த காமெடியை யாரும் மறந்திருக்க மாட்டோம்.

வெள்ளித்திரை போலவே சின்னத்திரையிலும் தாடி பாலாஜி மிகவும் பிரபலம். குறிப்பாக பிக் பாஸ் 2ம் சீசனில் அவர் தோன்றிய பிறகு அவருக்கு ரசிகர் கூட்டம் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது விஜய் டிவியில் பிரபலமாக நடந்துவரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று அசத்தி வருகின்றார். இடையில் அவரது குடும்ப ரீதியாக பல பிரச்சனைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் “காலம் கனிந்தது கதவுகள் திறந்தது” என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அவர் வாங்கிய புதிய BMW காரை தனது ரசிகர்களின் பார்வைக்கு அளித்துள்ளார். அவருடைய ரசிகர்கள் பலரும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவரது சக நடிகர்களும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றது. பல படங்கள் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடித்தாலும் பெரிய அளவில் பேசப்படாத தாடி பாலாஜி இந்த அளவுக்கு சாதித்துள்ளது பலருக்கும் உத்வேகம் அளிக்கும் விஷயமாக உள்ளது.

Related posts