TamilSaaga

“இனி சிங்கப்பூரில் எதுவும் வீணாகாது” : ஹாக்கர் மைய உணவுக் கழிவுகளைப் பயன்படுத்தி மின்சாரம்

சிங்கப்பூர் ஈஸ்ட் கோஸ்ட் லகூன் உணவு வில்லேஜில் உள்ள உணவுக் கழிவுகளை மின்சாரம் தயாரிக்கவும், உரம் தயாரிக்கவும் பயன்படுத்தப்படும் என தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் (NEA), சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (NUS) மற்றும் தேசிய பூங்கா வாரியம் (NParks) தெரிவித்துள்ளன. இன்று புதன்கிழமை (நவம்பர் 17) வெளியிட்ட ஒரு கூட்டு செய்தி அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூர் வாழ் வெளிநாட்டு ஊழியர்களுக்கு Pizza மற்றும் சமோசா

NUS ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட உணவுக் கழிவுகள் சுத்திகரிப்புக்கான, காற்றில்லா நொதிக்கும் அமைப்பு உணவுக் கழிவுகள் மற்றும் மீதமுள்ளவற்றை உயிர்வாயுவை உயிர் உரமாக மாற்றும். ஒரு உயிர்வாயு இயந்திரம் பின்னர் உயிர்வாயுவை மின்சாரமாக மாற்றும். அதே நேரத்தில் உரமானது மண்ணை வளப்படுத்த பயன்படுத்தப்படும். “உணவுக் கழிவுகள்” சிங்கப்பூரின் முதல் “Zero Waste” திட்டத்தின் கீழ் அடையாளம்காணப்பட முதன்மையான கழிவு என்றும் அந்த ஊடக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கடந்த 2020ம் ஆண்டில், சிங்கப்பூரில் உருவாகும் மொத்த கழிவுகளில், உணவுக் கழிவுகள் சுமார் 11 சதவிகிதம் ஆகும். ஆனால் உணவுக் கழிவுகளில் 19 சதவிகிதம் மட்டுமே மறுசுழற்சி செய்முறைக்கு பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ளவை கழிவுகள் வீணாக அகற்றப்படுகின்றன. “எனவே, உணவு வீணாவதைக் குறைத்தல், விற்கப்படாத அல்லது அதிகப்படியான உணவை மறுபகிர்வு செய்தல் மற்றும் உணவுக் கழிவுகளை மறுசுழற்சி செய்தல்/சுத்திகரிப்பது ஆகியவை முக்கியமான உணவுக் கழிவு மேலாண்மை உத்திகளாகும்.”

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

உணவுக் கழிவுகளின் முழுமையான மேலாண்மை மற்ற மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் மாசுபடுவதைத் தடுக்க உதவுகிறது. மேலும் பூச்சிகள் மற்றும் கெட்ட நாற்றங்கள் பரவுவதை நிறுத்துகிறது. “இத்தகைய தொழில்நுட்பங்கள் உணவு கழிவுகளை நிர்வகிப்பதற்கான சுற்றுச்சூழல் தடம் குறைக்க உதவுகின்றன மற்றும் பொருளாதாரத்திற்கு பங்களிக்கின்றன” என்று அந்த கூட்டறிக்கை தெரிவித்துள்ளது.

Related posts