TamilSaaga

தென் கொரியாவில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற விமானத்தின் இடது பக்க சக்கரம் கழண்டு விழுந்தது…

தென் கொரியாவில் இருந்து சிங்கப்பூருக்கு ஜூன் 19ஆம் தேதி செல்லவிருந்த விமானத்தின் இடது பக்க லேண்டிங் கியரில் உள்ள சக்கரம் காணவில்லை என்ற செய்தி அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.

தென் கொரியாவில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட SCOOT விமானம், இடையில் தைவானில் தரை இறங்கிய பொழுது அதன் இடது சக்கரம் காணாமல் போனது கண்டறியப்பட்டது. விமானம் தரையிறங்கும் பொழுது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

தைவானில் உள்ள TAOYAN சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய பொழுது கியரில் உள்ள சக்கரம் காணாமல் போனது பற்றி தெரிய வந்தது. இந்த விமானம் ஆனது அங்கிருந்து இரவு ஒன்று முப்பது மணிக்கு சிங்கப்பூருக்கு புறப்பட இருந்ததாகவும், விமானத்தில் ஏற்பட்ட இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான பயணம்உடனே ரத்து செய்யப்படுகின்றது எனவும் அறிவிக்கப்பட்டது.

சுமார் 300 பயணிகளை சுமந்து வந்த விமானம் அதிர்ஷ்டவசமாக அதன் வலது பக்க லேண்டிங் கியரில் உள்ள சக்கரத்தின் உதவியுடன் பத்திரமாக தரையிறங்கியது. தரை இறங்கிய பின்னரே சக்கரம் காணாமல் போன செய்தி பற்றி அறியப்பட்டது என தெய்வானை சேர்ந்த செய்தி நிறுவனம் கூறியது. பொதுவாக விமானம் தரையிறங்கும் பொழுது அதன் லேண்டிங் கியர் எனப்படும் சக்கரப் பகுதியில் பெரும்பளவு அதிர்வு ஏற்படும்.

அந்த அதிர்வினை தாங்கும் வகையில் சக்கரமானது மிகவும் கடினமான உலோகங்களால், நல்ல தரத்துடன் அதிர்வுகளை தாங்கும் வகையில் செய்யப்படும். விமானத்தின் பாதுகாப்பினை உறுதி செய்யும் பகுதி என்பதால் இன்ஸ்பெக்ஷன் செய்யப்படும் பொழுதும் இதில் அதீத கவனம் செலுத்தப்படும்.

இந்நிலையில்,சக்கரம் தரை இறங்கிய போது கழண்டு விழுந்திருக்கலாம் என்று விமானத்தின் ஓடு பாதையில் தேடப்பட்டது. ஆனால் அங்கே சக்கரம் இருந்ததற்கான அறிகுறி தெரியவில்லை.

இது குறித்து பயணிகளிடம் மன்னிப்பு கேட்ட ஸ்கூட் நிறுவனம், அவர்களுக்கு வேறு விமான மூலம் சிங்கப்பூருக்கு செல்ல வழிவகை செய்யப்படும் என்று ஆறுதல் கூறியது. மேலும் பயணிகளின் பாதுகாப்புக்கு எப்பொழுதும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று சான்று அளித்தனர்.

இந்நிலையில் தைவானில் இருந்த பயணிகள் மாற்று விமான மூலம் சிங்கப்பூருக்கு வரவழைக்க பட்டனர் என்று விமான நிலையத்தின் இணையதளம் குறிப்பிட்டுள்ளது. விமானத்தில் இருந்த பயணிகள் பத்திரமாக வந்து தரையிறங்கினாலும் விமானத்தின் சக்கரம் காணாமல் போன சம்பவம் பயணிகளிடையே வீதியை ஏற்படுத்தியது.

Related posts