TamilSaaga

“சிங்கப்பூரின் Wild Wild West Water Park” : சறுக்கி மகிழ்ந்த 250 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் – ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி

அண்மைக்காலமாக சிங்கப்பூரில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மனிதவள அமைச்சகத்தின் முன்னோடி திட்டத்தின் கீழ் பல இடங்களுக்கு சமூக வருகையாக சென்றுவருகின்றனர். இந்நிலையில் சிங்கப்பூரின் Wild Wild Wet என்ற Water Park பகுதிக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அழைத்து செல்லப்பட்டனர் என்று மனிதவள அமைச்சகம் வெளியிட்ட முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : சமூக வருகையில் சிங்கப்பூர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

இதுகுறித்து வெளியான அந்த பதிவில் “எங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர் நண்பர்கள் சிலருக்கு சமீபத்தில் Wild Wild West செல்ல வாய்ப்பு கிடைத்தது. கடந்த மூன்று சனிக்கிழமைகளில் வில்லோ தங்குமிடம் மற்றும் CCK தங்குமிடம் B ஆகியவற்றிலிருந்து தடுப்பூசி போடப்பட்ட 250-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களுக்கு, அவர்களின் தங்குமிட ஆபரேட்டரான Alfa Tech Vestasia மூலம் இந்த பயணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன” என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அனுபவம் குறித்து பேசிய புலம்பெயர்ந்த தொழிலாளி மலிதா ரசெல் “நிர்வாகம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ததற்கு நான் மிகும் நன்றியுள்ளவனாக இருப்பேன், Wild Wild Westகுச் செல்ல முடிந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் எதிர்காலத்தில் இன்னும் அதிகமான இடங்களுக்குச் செல்ல முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

மேலும் இந்த பொழுதுபோக்கு நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக ஆல்ஃபா டெக் வெஸ்டாசியாவிற்கு நன்றி. நமது புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நல்வாழ்வைக் கவனித்துக்கொள்வதற்கு முழு சமூக முயற்சியும் தேவைப்படுகிறது.

Related posts