TamilSaaga

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் கவனத்திற்கு.. சிங்கையில் பல இடங்களில் இன்று (செப்.18) வெள்ள அபாய எச்சரிக்கை!

சிங்கப்பூரில் பல பகுதிகளில் தற்போது (செப்.18) கனமழை பெய்து வருகிறது. இதனால், சிங்கையின் சில இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்படலாம் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் எச்சரித்துள்ளது.

சிங்கப்பூரில் சில பகுதிகளில் உள்ள கால்வாய்கள், வடிகால்கள் ஆகியவற்றில் நீர்மட்டம் 90 சதவிகிதம் எட்டிவிட்டதாக பொதுப் பயனீட்டுக் கழகம் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

உலு பாண்டன் கால்வாய், அலெக்ஸான்ட்ரா கால்வாய், Lor Gambir, Eng Kong Place, Neo Pee Teck Lane உள்ளிட்ட இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க – “இதுதான் சார் உண்மையான காதல்”.. சிங்கப்பூரில் 10 வருடத்துக்கு முன் இறந்த மனைவி.. துணையை தேடிச் சென்றவருக்கு ஏற்பட்ட சோகம் – ரியல் காதலை நினைத்து கண்ணீர் வடித்த இளம் ஜோடி

இதனால், சிங்கையில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் இன்று மிக எச்சரிக்கையுடன் வெளி இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts