TamilSaaga

சிங்கப்பூரில் நிரம்பி வழியும் வெள்ளம்.. பாதைகளை இழுத்து மூடிய அதிகாரிகள் – கவனம் நண்பர்களே!

இன்று ஞாயிற்றுக்கிழமை (செப். 18) காலை சிங்கப்பூர் முழுவதும் பலத்த மழை கொட்டியது.

இந்த மழையால் உலு பாண்டன் கால்வாயில் நீர் மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து, அதிகாரிகள் கிம் மோவில் உள்ள park connector-ன் ஒரு பகுதியை மூடிவிட்டனர் என்று தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

கனமழை பெய்து வருவதால் கால்வாயில் உள்ள நீர் நிலைகள் குறித்த வீடியோக்களை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

பழுப்பு நிறமாக மாறிய தண்ணீரால் நிரம்பிய கால்வாயைக் காட்டும் பிற படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டன.

சிங்கப்பூரில் சில பகுதிகளில் உள்ள கால்வாய்கள், வடிகால்கள் ஆகியவற்றில் நீர்மட்டம் 90 சதவிகிதம் எட்டிவிட்டதாக பொதுப் பயனீட்டுக் கழகம் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

உலு பாண்டன் கால்வாய், அலெக்ஸான்ட்ரா கால்வாய், Lor Gambir, Eng Kong Place, Neo Pee Teck Lane உள்ளிட்ட இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts