சிங்கப்பூரில் சுற்றுலா மற்றும் அது தொடர்புடைய துறைகளின் மீட்பு வேகம் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த மனிதவள அமைச்சர் டாக்டர் டான் “உண்மையில் சில நம்பிக்கைக்குரிய அறிகுறிகள் உள்ளன. விமான நிறுவனங்கள் வழிகளைத் திறக்கத் தொடங்கியுள்ளன என்று நினைக்கிறேன். ஜெர்மனி மற்றும் சிங்கப்பூர் இடையேயான பயணத்தை மீண்டும் தொடங்குவது அதற்கு ஒரு நல்ல உதாரணம் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.
அமைச்சர் டாக்டர் டான், சிங்கப்பூர் மிருகக்காட்சிசாலையில் மனிதவள அமைச்சகத்தின் (MOM) 24 வது வேலை நிலை அறிக்கையின்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசினார். சுற்றுலா மற்றும் தொடர்புடைய துறைகளின் மீட்பு வேகம் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த டாக்டர் டான் “உண்மையில் சில நம்பிக்கைக்குரிய அறிகுறிகள் உள்ளன. விமான நிறுவனங்கள் தங்களுடைய வழித்தாண்டகளை திறக்கத் தொடங்கியுள்ளன என்று நினைக்கிறேன்”
“ஆனால் இது எப்போது நடக்கும், என்பதை இப்போது ஒரு உறுதியான பதிலாக அளிப்பது கடினம்” என்றும் டாக்டர் டான் கூறினார், மேலும் பேசிய அவர் இரண்டு எச்சரிக்கைகளை பட்டியலிட்டார். அந்த எச்சரிக்கைகள் என்னவென்றால், நம்மிடம் அதிக தடுப்பூசி விகிதம் இருந்தாலும், பல நாடுகளில் தடுப்பூசி விகிதம் என்பது நம்மிடம் உள்ளதை போல இல்லை. அதனால் நாம் அதனால் ஏற்படும் அபாயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன், “என்று அவர் கூறினார்.
“அடுத்த எச்சரிக்கை என்னவென்றால், டெல்டா வகை வைரஸ் இன்னும் நமக்கு ஒரு அச்சுறுத்தலாகவே உள்ளது என்றும் கூறினார்.
சிங்கப்பூர் மட்டுமின்றி உலக அளவில் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா மற்றும் வாழ்க்கை முறை சேவை துறையில் உள்ள நிறுவனங்கள், மீண்டும் மீண்டு வர தற்போது உதவிகளை பெற்று வருகின்றன. கடந்த ஆண்டு ஜனவரி முதல் மேலும் 18 தொழில் மாற்ற திட்டங்கள் இதற்காக சிங்கப்பூரில் தொடங்கப்பட்டன.
இந்த திட்டங்கள் டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப திறன்களைக் கொண்ட தொழிலாளர்களை சித்தப்படுத்துவதற்கும், புதிய வாய்ப்புகளைப் பெறுவதற்கும் உதவுகின்றன என்று மனிதவள அமைச்சகம் (MOM) மற்றும் Singapore Work Force (WSG) இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 25) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் நடுப்பகுதி வரை, 200 க்கும் மேற்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்த 3,100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்துள்ளனர். அதேபோல கடந்த 2019ல் 40 நிறுவனங்களில் இருந்து 110 பணியாளர்கள் வரை இந்த திட்டத்தில் சேர்ந்துள்ளனர். மொத்தத்தில், சுற்றுலா மற்றும் வாழ்க்கை முறை சேவைத் துறைக்கு இதுபோன்ற 23 திட்டங்கள் இப்போது உள்ளன.