TamilSaaga

சிங்கப்பூர்.. “முடிவெட்ட போனதுக்கு 1,771 வெள்ளி பில் போட்டாங்க” : கடுப்பான நபர் – ஆனா கடைக்காரர் கொடுத்த நெத்தியடி பதில்

சிங்கப்பூர் Yishun பகுதியில் உள்ள ஒரு முடிவெட்டும் கடைக்கு முடி வெட்டுதல் மற்றும் தலையில் சாயம் பூசும் சேவைக்காக சென்ற 61 வயது முதியவர், அங்கு S$1,771 விலையுள்ள Service Packageக்கு ஒப்புக்கொண்டு கையெழுத்திட, அதன் பிறகு அதனை ஏன் செய்தோம் என்று வருத்தப்பட்டுள்ளார். இறுதியில் கடுப்பான லீ என்ற அந்த வாடிக்கையாளர், சமூக ஊடகங்களில் தனது குறைகளை வெளிப்படுத்தி மக்களையும் உஷார்படுத்தியுள்ளார்.

மேலும் படிக்க – “சிங்கப்பூரில் புதிய வேலைவாய்ப்பு பாஸ் மற்றும் S Pass விண்ணப்பதாரர்கள்” : அடிப்படை தகுதி சம்பளத்தில் 500 டாலர் உயர்வு

அவரது இந்த வழக்கு பற்றிய விவரங்களை ஷின் மின் டெய்லி நியூஸ் வெளியிட்டுள்ளது. லீ கடந்த பிப்ரவரி 5 மாலை தனது தலைமுடியை வெட்டி பின் அதற்கு சாயமிடுவதற்காக பிளாக் 717 Yishun தெரு 71ல் உள்ள அந்த சலூனுக்குச் சென்றுள்ளார்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் அதிகம் சம்பாதிப்பவர்கள் “உச்” கொட்ட வைக்கும் அறிவிப்பு.. 2022 பட்ஜெட்டின் வரி மாற்றங்கள் – தெரிந்து கொள்ள வேண்டிய 6 விஷயங்கள்

அவர் முதலில் முடிவெட்டிக்கொள்ள மட்டுமே விரும்பியதாகவும், ஆனால் பின்னர் தனது தலை முடி நரைத்திருந்தால் தலைமுடிக்கு சாயம் பூச முடிவு செய்ததாகவும் கூறினார். அப்போது சலூனில் இருந்த ஊழியர்கள் அவருக்கு உச்சந்தலையில் பிரச்சனை (Scalp) இருப்பதாக சுட்டிக் காட்டினார்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க – சிங்கப்பூர் பட்ஜெட் 2022: குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு “ஆஹா” அறிவிப்பு

இறுதியில் லீ முடி வெட்டுதல், முடிக்கு டை போடுதல் மற்றும் Scalp சிகிச்சைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு packageஐ எடுக்க ஒப்புக்கொண்டார். ஆனால் எல்லா சேவைகளும் முடிந்து செக்-அவுட் (பணம் செலுத்திய பிறகு) செய்யும்போது தான் பேக்கேஜ் குறித்த செலவுகள் பற்றி தன்னிடம் கூறப்பட்டதாக லீ கூறினார்.

மேலும் படிக்க – Budget 2022: குடியிருப்பு சொத்துகளுக்கான வரி விகிதங்கள் 12 முதல் 36 சதவீதம் வரை உயருகிறது! சிங்கப்பூரர்களே நோட் பண்ணிக்கோங்க!

“பணியாளர்கள் ஆரம்பம் முதல் இறுதி வரை பேக்கேஜ் மற்றும் அது தொடர்புடைய கட்டணங்களை பற்றி குறிப்பிடவில்லை என்றும். மேலும் செக்-அவுட்டின் போது பேக்கேஜ் மற்றும் அது தொடர்புடைய சில தள்ளுபடிகளை பற்றி விளக்கினர்” என்றார் அவர்.

கடைக்காரர் மற்றும் லீ சண்டையிட்ட காட்சி

தனக்கு கொடுக்கப்பட்ட பில் தொகையை “இரண்டு தவணைகளில் செலுத்தலாம் என்றும் கடைக்காரர்கள் கூறியுள்ளனர், ஆனால் இது சற்றும் நியாயம் இல்லாத விலை என்று தான் நினைப்பதாக கூறிய அவர், எனது போனில் சார்ஜ் குறைவாக இருந்ததாலும் தனக்கு பின்னல் சில customers வரிசையில் நின்றிருந்ததாலும் S$941 பணத்தை ஒரு ‘குழப்பம்’ நிறைந்த மனநிலையில் செலுத்திவிட்டு அங்கிருந்து கிளம்பியதாக கூறினார். இறுதியில் நான் வீட்டிற்கு வந்தவுடன் அதைப் பற்றி பல முறை யோசித்து, இறுதியில் நான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தேன். உடனே நான் அதை என் குடும்பத்தாரிடம் சொன்னேன்” என்றார் லீ.

சிங்கப்பூரில் “காதல்” எனும் பெயரில் நடக்கும் “காமக்களியாட்டம்”.. இந்தோனேசிய பெண்களிடம் சிக்கும் சில வெளிநாட்டு தொழிலாளர்கள்

மூன்று தனித்தனி பரிவர்த்தனைகளில் லீ S$760, S$91 மற்றும் S$90 செலுத்தியதாக ரசீதுகள் காட்டுகின்றன. தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த லீ இதே முடிவெட்டும் தொழிலில் உள்ள தனது உறவினர்ஒருவரின் உதவியை நாட, அந்த உறவுக்கார பெண் தனது மாமாவின் சார்பாக அந்த கடைக்கு சென்று விசாரித்துள்ளார். கடைக்காரர்களிடம் இந்த சம்பவம் குறித்து பேசிகொண்டிருந்த நிலையில் வாக்குவாதம் முற்றியது. அந்த தகராறின் வீடியோ இணையத்திலும் பரவியது, இறுதியில் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க – Budget 2022: சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்களை “வேற லெவலுக்கு” கொண்டு செல்லும் “company training committee” – இது உண்மையில் “தூள்” அறிவிப்பு

இறுதியில் தான் சலூனுக்கு சென்று முடிவெட்டிக்கொண்டதற்காக S$180 செலுத்தத் தயாராக இருப்பதாக லீ கூறி, பேக்கேஜிற்காக அவர் ஏற்கனவே செலுத்திய மீதமுள்ள பணத்தைத் திரும்பக் கொடுக்கும்படி கடைகாரர்களிடம் கேட்டுள்ளார், மேலும் சிங்கப்பூர் நுகர்வோர் சங்கத்திடம் புகார் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனையடுத்து ஊடகங்களின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, சலூன் வைத்திருக்கும் ஒரு பெண் பேசும்போது, லீ சொல்வதையெல்லாம் கேட்டுக்கொள்ள ஒரு குழந்தையோ அல்லது அவருக்கு ஞாபக மறதி நோய்க்கு கொண்டவரோ அல்ல. தனது கடையின் வாடிக்கையாளராக லீ, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை தனது தலைமுடியை வெட்டுவார் என்றும், சில மாதங்களுக்கு ஒருமுறை அதற்கு சாயம் பூசும் பழக்கம் உள்ளது என்று கூறினார். இதனால் தான் எங்கள் ஊழியர்கள் லீக்கு அந்தப் Packageஐ அறிமுகப்படுத்தியதாகவும் உரிமையாளர் தெளிவுபடுத்தினார்.

Budget 2022: ஆரம்பமே அதிரடி! 950,000 சிங்கப்பூர் குடும்பங்களுக்கு கூடுதல் தள்ளுபடி.. $100 CDC வவுச்சர்கள் அறிவிப்பு

அந்த Packageக்கு செலுத்தப்பட்ட பணம் திரும்பப் தரப்படமாட்டாது, அதே நேரத்தில் லீ தரவேண்டிய மீதமுள்ள தொகையைத் நாங்கள் கேட்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். மேலும் இந்த நிகழ்விற்கு பிறகும், லீயை மீண்டும் தனது கடைக்கு வரவேற்பதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts