TamilSaaga

“இனி வாரத்திற்கு 4.5 நாட்கள் மட்டுமே வேலை” : அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட உலகின் முதல் நாடு

உலக அளவில் தற்போது முதல்முறையாக வாரத்திற்கு வெறும் 4.5 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக அறிவித்துள்ளது வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகம். இது பற்றிய புதிய அறிவிப்புகளை அந்த நாடு தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளவில் பரவியுள்ள பல முஸ்லிம் நாடுகளில் இறைவணக்க நாளாக வெள்ளிக்கிழமை உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

இதையும் படியுங்கள் : மலேசியாவைச் சேர்ந்த நைஜீரியர்கள் சிங்கப்பூரில் கைது

ஆகையால் இந்த வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அந்த நாளின் மதியத்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் வார இறுதி நாட்கள் தொடங்குகின்றன. வாழ்க்கைச் சூழலை சமநிலைப்படுத்த மற்றும் சமூக நலன் ஆகியவற்றை ஊக்குவிக்கும் பல முயற்சிகளின் ஒரு பகுதியாக ஐக்கிய அரபு அமீரக அரசு இந்த வார இறுதிநாள் நீட்டிப்பை அறிவித்துள்ளது.

ஆகையால் இனி பணியாளர்களுக்கு வாரத்திற்கு 4.5 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 2022ம் ஆண்டு முதல் இந்த நேர அமைப்பு துவங்கும். “சுறுசுறுப்பான வேலை முறையை” ஏற்றுக்கொள்வதன் மூலம் UAE வளர்ந்து வரும் மாற்றங்களுக்கு விரைவாக பதிலளிக்கவும், பணியிடத்தில் நல்வாழ்வை மேம்படுத்தவும் உதவும் என்று எமிரேட்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அல்தாபி கேபிட்டலின் தலைமை மூலோபாய அதிகாரி முகமது அலி யாசின் ராய்ட்டர்ஸிடம் இந்த நடவடிக்கையால் நிதித் துறை பயனடையும் என்று கூறினார், மேலும் சுற்றுலாத் துறை இந்த மாற்றத்தின் மற்றொரு பயனாக இருக்கும் என்று பரிந்துரைத்தார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts