TamilSaaga

“நாங்க சிங்கப்பூர் போலீஸ் பேசுறோம்” : தமிழரிடம் 2 லட்சம் ஆன்லைன் மூலம் மோசடி – முடுக்கிவிடப்பட்ட விசாரணை

Singapore Police: சிங்கப்பூரில் இருந்து போலீஸ் பேசுறோம் என்று கூறி, ஆன்லைனில் ரூ.2 லட்சம் வரை மோசடி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விளார் சாலையை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது வயது 45. இவர் சிங்கப்பூரில் சில ஆண்டுகள் வேலை செய்திருக்கிறார். அப்போது அங்கு அவர் கிரெடிட் கார்டும் பயன்படுத்தி வந்திருக்கிறார்.

இந்நிலையில், முருகானந்தம் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா திரும்பிய நிலையில், மீண்டும் கொரோனா பரவல் அதிகமானதால் சிங்கப்பூர் திரும்ப முடியவில்லை. இதனால், பணிக்கு செல்ல முடியாமல் சொந்த ஊரிலேயே முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

“நாகேந்திரனை காப்பாத்துங்க; கெஞ்சிக் கேட்கிறேன்” – சிங்கப்பூர் அரசிடம் சகோதரி உருக்கம்

இந்த சூழலில், இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு கடந்த அக்டோபர் மாதம் 22-ம் தேதி ஒரு அழைப்பு வந்திருக்கிறது. மறுமுனையில் பேசிய நபர், “நான் சிங்கப்பூர் போலீஸ் டிபார்ட்மெண்ட்டில் இருந்து பேசுகிறேன். உங்களது கிரெடிட் கார்டில் பணம் செலுத்தப்படாமல் உள்ளது. ஆகையால், உடனடியாக பணத்தை செலுத்து வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

இந்த தொலைபேசி அழைப்பை சற்றும் எதிர்பார்க்காத முருகானந்தம், மர்ம நபர் பேசியதை உண்மை என நம்பி, அவர் விவரங்கள் கேட்க கேட்க, தனது மனைவி பெயரிலுள்ள பேங்க் அக்கவுண்ட் மற்றும் இதர கணக்கு விவரத்தையும், OTP நம்பரையும் கூறி இருக்கிறார்.

இதையடுத்து, முருகானந்தம் மனைவியின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1 லட்சத்து 98 ஆயிரத்தையும், மற்றொரு அக்கவுண்ட்டில் இருந்து ரூ.2 ஆயிரத்தையும் அந்த மர்ம நபர் சிறிது நேரத்திற்கெல்லாம் ஆன்லைன் மூலம் எடுத்துவிட்டார்.

Breaking : சிங்கப்பூர் – திருச்சி : டிசம்பர் முதல் மார்ச் 2022 வரையிலான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் டிக்கெட் புக்கிங் தொடக்கம்

டெபிட் செய்யப்பட்ட இந்த தொகை கிரெடிட் கார்டிலும் வரவு வைக்கப்படவில்லை என்பது பின்னர் தான் தெரிய வந்தது. பேரதிர்ச்சி அடைந்த முருகானந்தம், உடனடியாக இந்த மோசடி குறித்து தஞ்சை சைபர் குற்ற போலீஸ் பிரிவில் புகார் செய்ததையடுத்து, போலீசார் இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

ஆகையால், சிங்கப்பூரில் இருந்து போலீஸ் பேசுகிறோம், வங்கியில் இருந்து பேசுகிறோம் என்று சொல்லி யார் இதுபோன்ற தகவல்களை கேட்டாலும், உஷாராக இருக்க வேண்டியது நமது கடமையாகிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts