TamilSaaga

“சிங்கப்பூர் பிரதமரை சந்தித்து பின் நாடு திரும்பிய “இந்திய” அமைச்சர்” : இரு நாட்டு வர்த்தக விமான போக்குவரத்துக்கு வாய்ப்பு

சென்னை, டெல்லி மற்றும் மும்பையில் இருந்து தலா இரண்டு தினசரி விமானங்களுடன் திட்டமிடப்பட்ட வணிக சேவைகளை மறுதொடக்கம் செய்ய சிங்கப்பூர் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது இந்திய அரசு. தற்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மூலம் நாடு திரும்பும் பணி மட்டுமே வந்த பாரத் திட்டத்தின் கீழ் இருநாடுகளுக்கு இடையே சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : “வர்த்தக விமானங்களை மீண்டும் தொடங்க திட்டம்”

மேலும் வரும் 29ம் தேதி முதல் சிங்கப்பூர் தனது VTL சேவைகளை இந்தியாவிற்கு திறக்கவுள்ளது என்பதும் நினைவுகூரத்தக்கது. இந்த சேவை தொடங்கப்பட்டது இந்தியர்கள் தனிமைப்படுத்துதல் இன்றி சிங்கப்பூருக்குள் நுழைய வழிபிறக்கும் என்று பலரின் நம்பிக்கையாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தியோகபூர்வ பயணமாக சிங்கப்பூர் வந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் நேற்று மீண்டும் இந்தியா திரும்பினார்.

இந்த சந்திப்பின்போது போக்குவரத்துக்கு அமைச்சர் ஈஸ்வரன், சுகாதார அமைச்சர் ஓங் யீ குங், வர்த்தக அமைச்சர் லாரன்ஸ் வோங், வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன், சட்ட அமைச்சர் சண்முகன் மற்றும் நமது பிரதமர் லீ ஆகியோரை சந்தித்து இரு நாடு உறவு குறித்து பல விஷயங்களை பேசினார். குறிப்பாக இருநாடுகளிடையே மீண்டும் வர்த்தக விமானங்களை இயக்குவது குறித்து அவர் அமைச்சர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

நேற்று அவர் மீண்டும் இந்தியா திரும்பிய நிலையில் “பயனுள்ள இந்த மூன்று நாள் பயணம் முடிவடைந்தது, நல்ல பல விஷயங்களை விரைவில் எதிர்பார்க்கலாம்” என்று கூறியுள்ளார். ஆகையால் சிங்கப்பூர் மற்றும் இந்தியா இடையே வந்தே பாரத் மட்டுமே இயக்கப்பட்டு வரும் நிலையில் விரைவில் scoot மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் போன்ற விமானங்கள் இயக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றது.

Related posts