TamilSaaga

சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட இலவச கூப்பன்கள்… மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்ட தொழிலாளர்கள்!

சிங்கப்பூரை பொறுத்தவரை விலைவாசி தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். உயர்ந்து வரும் விலைவாசியை கட்டுப்படுத்துவதற்காக சிங்கப்பூர் மக்களுக்கு அரசு தொடர்ந்து பல சலுகைகளை அதிகரித்து வருகிறது. ஆனால் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அப்படி அல்ல. சிங்கப்பூரில் அவர்கள் பெறுகின்ற குறைந்த வருமானத்தை வைத்து தான் எல்லா செலவினங்களையும் சமாளிக்க வேண்டும்.

எனவே வெளிநாட்டு ஊழியர்களின் கஷ்டங்களை கணக்கில் கொண்டு அவர்களுக்கு உதவும் வகையில் மளிகை பொருட்கள் வாங்க 70 டாலர் மதிப்பிலான கூப்பன் களையும் மதிய உணவினையும் வழங்கி சிறப்பித்துள்ளனர் சிங்கப்பூரைச் சேர்ந்த தொண்டு ஊழியர்கள். கடந்த புதன்கிழமை நடைபெற்ற சமூக சேவை திட்டத்தின் ஒரு அங்கமாக வெளிநாட்டு ஊழியர்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்பட்டதாக சேவைகளைப் பெற்ற ஒரு வெளிநாட்டு ஊழியர் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

சிங் லேண்ட் எனப்படும் தொண்டு ஊழிய நிறுவனம் ஆனது சிங்கப்பூரில் பலதரப்பட்ட சேவைகளை வழங்கி வருகின்றது. குறிப்பாக கொரோனா நோய் தொற்று காலத்திலிருந்து வெளிநாட்டு ஊழியர்களுக்கு இந்நிறுவனம் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றது. இதன் தொடர்ச்சியாக வெளிநாட்டு ஊழியர்களுக்கு கூப்பன்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். கூப்பன்களை வாங்கும் பொழுது தொழிலாளர்களின் முகத்தில் காணப்பட்ட சிரிப்பை காணும் பொழுது மகிழ்ச்சி அளித்ததாகவும் அவர்கள் கூறினர். இதை பயன்படுத்தி ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்களை வாங்கலாம் என்ற வெளிநாட்டு ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Related posts