TamilSaaga

“மகளையும் பணிப்பெண்ணையும் துன்புறுத்திய பெண்” : நீதிமன்றத்தில் ஆஜர் – என்னவெல்லாம் செய்தார் தெரியுமா?

சிங்கப்பூரில் மனநல கோளாறுகளால் அவதிப்பட்டு வந்த ஒரு பெண் தன்னிடம் பணிபுரிந்த பணிப்பெண்ணை உடல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். ஒரு முறை அந்த வேலையாளை அவர் மூச்சுவிடமுடியாத அளவிற்கு ஒரு துண்டால் அவரது கழுத்தை இறுக்கியுள்ளார். மேலும் தன் சொந்த மகளின் மீது சூடான லைட்டரை வைத்து அலுத்தியுள்ளார். பாதிக்கப்பட்டவரின் அடையாளங்களைப் பாதுகாக்கும் பொருட்டு பெயரிட முடியாத அந்த 41 வயதான பெண், இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 15) நீதிமன்றத்தில் தான முன்வந்து தனது குழந்தை மற்றும் வேலையாளை தாக்கியதை ஒப்புக்கொண்டார்.

அந்த பெண் தனது கணவர் மற்றும் 11 வயது மகளுடன் இப்போது ஒரு குடியிருப்பில் தங்கியிருப்பதாக நீதிமன்றம் கூறியது. மேலும் பாதிக்கப்பட்ட அந்த 28 வயதான இந்தோனேசிய நாட்டவர் கடந்த மார்ச் 2017ல் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார். அந்த பணிப்பெண்ணுக்கு எந்த நாளும் விடுப்பு அளிக்கப்படவில்லை. மற்றும் அவர் கைபேசியை பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. மேலும் வீட்டு வேலைகள் மட்டுமல்லாமல் குற்றம் சாட்டப்பட்டவரின் மகளைப் பராமரித்து வந்துள்ளார்.

வழக்கறிஞர், மார்ச் மற்றும் நவம்பர் 2017-க்கு இடையில் “எந்த பிரச்சனையும் இல்லை” என்று கூறினார், இருப்பினும் குற்றம்சாட்டப்பட்டவர் சில சமயங்களில் வீட்டு வேலைக்காரரை அவரது சிறு சிறு தவறுகளுக்கு அவ்வப்போது திட்டியுள்ளார் என்று கூறினார். மேலும் அந்த பணிப்பெண் அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து வேலைகள் செய்து பிறகு 12.30 மணிக்கு தான் உறங்க அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டை விட்டு வெளியேறவும் அனுமதிக்கப்படவில்லை. 2018 ஜனவரியில் ஒரு முறை, குற்றம் சாட்டப்பட்டவர் எழுந்து பார்த்தபோது பாதிக்கப்பட்டவர் அறையை சுத்தம் செய்யவில்லை.

இதனால் கோபமடைந்த அவர் அப்பெண்ணை திட்டியுள்ளார். மேலும் அவர் முகத்தில் அறைந்துள்ளார், பின் காலால் உதைத்த நிலையில் அவர் நிலைகுலைந்து தரையில் விழுந்துள்ளார். இதேபோல பலமுறை அவர் மீது பலமுறை தாக்குதல் நடத்தியுள்ளார். அதேபோல தனது மகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இந்நிலையில் தண்டனை மற்றும் பிரதிவாதிகள் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய நீதிபதி சிறிது அவகாசம் கேடுள்ளநிலையில் அவருக்கான தண்டனை பின்னர் வழங்கப்படும் என்று கூறினார்.

Related posts