TamilSaaga

இந்திய CMP தொழிலாளர்கள் புதிய Rulesன் கீழ் IPAவில் சிங்கப்பூர் வருவது எப்படி? Entry Approval தேவையா? MOMன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்தியர்கள் உள்பட மலேசியர் அல்லாத (Non Malaysian Workers) கட்டுமானம், கப்பல் கட்டும் தளம் அல்லது Process துறை (CMP) ஊழியர்களை IPAவில் சிங்கப்பூருக்குக் கொண்டுவருவதற்கான நுழைவு ஒப்புதல் தேவைகள் மற்றும் நடவடிக்கைகள் பற்றி முழுமையாக இந்த பதிவில் காணலாம்.

கடந்த ஏப்ரல் 1ம் தேதி புதுப்பிக்கப்பட்ட விதிகளின்படி தற்போது IPAல் உள்ள மலேசியர் அல்லாத “பணி அனுமதி” அல்லது “பயிற்சி பணி அனுமதி” உள்ள CMP பணியாளர்கள் மட்டுமே கட்டாயம் Entry Approvalஐ பெற்ற பிறகே சிங்கப்பூருக்குள் நுழையமுடியும். மேலும் அவர்கள் சிங்கப்பூர் வந்திறங்கிய பிறகு On-Board மையத்தில் 4 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் ‘பாட்ஷா’ கெட்டப்பில் வந்து அதிர வைத்த ரஜினிகாந்த் – 27 ஆண்டுகளுக்கு பின் வீடியோ வெளியிட்ட “NOISE AND GRAINS” நிறுவனம்

அதேபோல மற்ற அனைத்து CMP ஊழியர்களும் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு Entry Approval எடுக்க தேவையில்லை. இருப்பினும், அவர்கள் தற்போதைய சிங்கப்பூரின் பயணக்கட்டுப்பாடுகளுக்கு இணங்க வேண்டும்.

இந்த Entry Approval தேவைகள், MOM மூலம் அங்கீகரிக்கப்பட்ட IPAல் உள்ள மலேசியர்கள் அல்லாத CMP பணியாளர்களை சிங்கப்பூர் அழைத்து வர விண்ணப்பிக்கும் முதலாளிகளுக்கானது என்பது நினைவுகூரத்தக்கது. பங்களாதேஷ், இந்தியா அல்லது மியான்மரில் இருந்து IPAல் உள்ள CMP பணியாளர்களை, சிங்கப்பூர் அழைத்துவர மற்ற தொழில்துறை சார்ந்த திட்டங்களையும் அவர்களின் முதலாளிகள் பரிசீலிக்கலாம். அதேபோல பங்களாதேஷ், இந்தியா மற்றும் மியான்மரில் இருந்து IPAல் சிங்கப்பூர் புறப்படும் புதிய தொழிலாளர்கள் PDPPவை முடித்திருக்க வேண்டும்.

சிங்கப்பூருக்குள் நுழைவதற்கான நிபந்தனையாக, MOM வழங்கிய Entry Approval அனுமதியைப் பெற்ற CMP பணியாளர்கள் தங்கள் Entry Approval சம்மந்தமாக அனுப்பப்படும் மின்னஞ்சல்களில் கூறப்பட்டுள்ளபடி நடைமுறையில் உள்ள Entry Approval தேவைக்கு இணங்க வேண்டும். மேலும் அவர்களின் முதலாளிகள் தங்கள் தொழிலாளர்களின் நுழைவுக் கட்டணங்களைச் செலுத்த வேண்டும் மற்றும் அவர்கள் தாங்கள் அழைத்து வரும் தொழிலாளர்கள் Entry Approval பெற தகுதியானவர்களா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

Entry Approval மூலம் வரும் தொழிலாளர்கள் கவனத்திற்கு

வருவதற்கு முன் முழுமையாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

வருகைக்கு முன் 3 நாட்களுக்குள் SG வருகை அட்டை (SGAC) இ-சேவையைப் பயன்படுத்தி உடல்நலம் மற்றும் பயண அறிவிப்பைச் சமர்ப்பிக்கவும்.

சாலையோர உணவகம் என்று நினைத்து.. கல்யாண வீட்டுக்குள் நுழைந்த “சிங்கப்பூர் கோஷ்டி” – செமத்தியாக “கவனித்து” அனுப்பிய கல்யாண வீட்டார்

புறப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன் PCR சோதனை அல்லது ART எடுக்கவும்.

ஆன்போர்டு மையத்தில் 4 நாள் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்

வெளிநாட்டில் தடுப்பூசி போடப்பட்ட தொழிலாளர்கள், சிங்கப்பூர் வந்த 7 நாட்களுக்குள் தங்கள் தடுப்பூசி நிலையை உறுதிப்படுத்த, பொது சுகாதாரத் தயார்நிலை கிளினிக்கில் செரோலஜி பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் தகவல்களை பெற 6812 5555 என்ற சிங்கப்பூர் எண்ணில் நீங்கள் தொடர்புகொள்ளலாம்

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts