TamilSaaga

ஊரே வியந்த திருமணம்… கணவரின் ‘எல்லை’ மீறிய உறவு – “இசைஞானி” இளையராஜா குடும்பத்தில் சோகம்

இசைஞானி இளையராஜா குடும்பத்தில் நடந்த சம்பவம் அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இசைஞானி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இளையராஜா, இந்தியாவின் இசை சக்கரவர்த்தி என்றால் அது மிகையாகாது. அங்கு இன்னமும் அவர் தான் இசைக்கு ராஜா. இந்தியாவில் மட்டுமல்ல.. சிங்கப்பூர் உட்பட உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் உணர்வுகளோடு கலந்திருப்பவர் இளையராஜா.

மேலும் படிக்க – “சொற்ப பணத்தின் மேல் ஆசை” – சிங்கப்பூரில் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றிக்கொள்ளும் வெளிநாட்டு தொழிலாளர்கள்

இளையராஜாவுடைய மனைவி திருமதி ஜீவாவின் சகோதரர் மகள் பெயர் விலாசினி. இவருக்கு சபரி ஞானபிரகாசம் என்பவருடன் பெற்றோர்களால் பார்த்து திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இளையராஜா வீட்டுத் திருமணம் என்பதால், அதிக பொருட்செலவில் அனைவரும் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு நடத்தப்பட்டது.

எனினும், விலாசினியின் வாழ்க்கையில் திருமண உறவு இனிக்கவில்லை. கல்யாணமான சில நாட்களிலேயே தம்பதிகளிடையே பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. தினம் சண்டை என்ற அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. கணவர் சபரி தன்னை தினம் அடித்து துன்புறுத்துகிறார் என்றும், பல மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகிறார் என்றும், அதனை அறியாமல் அவரை தெரியாத்தனமாக கல்யாணம் செய்து கொண்டதாக விலாசினி அடுக்கடுக்காக குற்றம் சாட்டியுள்ளார்.

இதையடுத்து, இருவரது திருமண வாழ்க்கை டைவர்ஸுக்கு சென்றுள்ளது. குறிப்பாக, தன் கணவர் சபரிக்கு வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய கள்ள உறவு இருப்பதாக விலாசினி கூறியுள்ளார். தங்கள் இருவரின் பிரச்னைக்கு இந்த கள்ள உறவே காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க – சிங்கப்பூர் Jurong East பகுதி.. “நூலிழையில் தப்பிய மூவர்” : பொறுப்பற்று செயல்பட்ட பேருந்து ஓட்டுநர் – Video உள்ளே

எனினும், விலாசினி சோர்ந்துவிடவில்லை. விவாகரத்துக்கு பிறகு அவர் மிக வேகமாக தனது தொழிலில் முன்னேறி வருகிறார். மணப்பெண்களுக்கு மேக்கப் போடும் வேலை செய்து வந்த விலாசினி, மெல்ல மெல்ல தொலைக்காட்சிகளில் அடியெடுத்து வைத்தார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்’ பாவம் கணேசன்’ தொடரில் ஹீரோ நவீனின் ஜோடியாக நடித்து வருவது விலாசினி தான். நவீன் இவரது நெருங்கிய நண்பர் என்பதால், இந்த சீரியல் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பு கிடைப்பவர்கள் அனைவரும் ஜெயிப்பதில்லை. மிகச் சிலரால் மட்டுமே அந்த வாய்ப்பை வெற்றியாக மாற்ற முடிகிறது. அந்த வகையில், விலாசினி இந்த சீரியல் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை தேடிக் கொண்டார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழகத்தின் பிரபல பொழுதுபோக்கு சேனலாக வலம்வரும் “BlackSheep” டீம் நடத்திய “ராஜபார்வை” நிகழ்ச்சியை, விக்னேஷ் காந்துடன் இணைந்து தொகுத்து வழங்கியதும் விலாசினி தான். அந்த நிகழ்ச்சியே இளையராஜாவுக்காக தான் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts