TamilSaaga

Exclusive : “அவசரத்துக்கு டிக்கெட்டை கேன்சல் செய்ய முடியல?” – பதறும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள்

பெருந்துதொற்று பரவல் காரணமாக பன்னாட்டு விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அண்டை நாடான இந்தியாவில் இருந்து வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இயங்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களை தவிர பிற பன்னாட்டு விமான சேவைகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளை தவிர பிற நாடுகளுக்கு குறைந்த அளவிலான விமானங்கள் இயக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகின்றது. இந்நிலையில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் செயல்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் சில சிரமங்களை மக்கள் எதிர்நோக்குவதாக தெரியவந்துள்ளது.

சிங்கப்பூர் முதல் திருச்சி மற்றும் சென்னை ஆகிய மார்கங்களில் பயணிக்கும் பயணிகள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். ஆனால் சில அவரச காரியங்களுக்காக பதிவு செய்த அந்த டிக்கெட்டை ரத்து செய்ய முயற்சிக்கும்போது தேதி மாற்றத்திற்கு மட்டுமே அனுமதி கிடைக்கின்றது. மாறாக டிக்கெட்டை ரத்து செய்ய முடிவதில்லை என்று கூறப்படுகிறது.

தற்போது இந்த கொரோனா காலகட்டத்தில் விமான டிக்கெட் விலைகள் பன்மடங்கு உயர்ந்துள்ள நிலையில் சில அவசர தேவைகளுக்காக டிக்கெட் கேன்சல் செய்ய நினைப்பவர்களுக்கு பெறும் இடியாக இந்த செய்திகள் உள்ளது என்றால் அது மிகையல்ல.

ஆகவே அவரச தேவைகளுக்காக மக்கள் டிக்கெட்டை கேன்சல் செய்ய உதவி செய்ய வேண்டும் என்று மக்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts