TamilSaaga

சிங்கப்பூரில் ‘பாட்ஷா’ கெட்டப்பில் வந்து அதிர வைத்த ரஜினிகாந்த் – 27 ஆண்டுகளுக்கு பின் வீடியோ வெளியிட்ட “NOISE AND GRAINS” நிறுவனம்

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 1995ம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட் அடித்த படம் “பாட்ஷா”. இன்றைய தேதி வரை தமிழ் சினிமாவில் “டான்” படங்களின் டிரெண்ட் செட்டராக பாட்ஷா மட்டும் தான்.

இன்னும் சொல்லப்போனால், மாஸ் காட்சிகளிலும் சரி, டான் கதையமைப்பிலும் சரி.. பாட்ஷாவை மிஞ்சும் அளவுக்கு எந்த படமும் எடுக்கப்படவில்லை.

ரஜினிகாந்தின் உச்சக்கட்ட ஹீரோயிஸம், அவரையே தூக்கிச் சாப்பிடும் வில்லன் ரகுவரனின் பாத்திர வடிவமைப்பு என்று மைல்கல் தொட்ட படம் பாட்ஷா. இப்படத்தை தயாரித்தது, அந்த காலக்கட்டத்தில் அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பன் தான்.

பாட்ஷா படத்தின் வெற்றி விழாவில், ‘தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம்’ அதிகரித்துவிட்டது என்று அமைச்சர் வீரப்பனை அவையில் வைத்துக் கொண்டே ரஜினிகாந்த் பேச, அடுத்த சில தினங்களில் அவருடைய அமைச்சர் பதவியே காணாமல் போனது. பதவியை விட்டு தூக்கியது அப்போது முதல்வராக இருந்த செல்வி.ஜெ.ஜெயலலிதா.

மேலும் படிக்க – சாலையோர ஹோட்டல் என்று நினைத்து.. கல்யாண வீட்டுக்குள் நுழைந்த “சிங்கப்பூர் கோஷ்டி” – செமத்தியாக “கவனித்து அனுப்பிய” கல்யாண வீட்டார்

தன்னகத்தே இத்தனை விஷயங்களை பாட்ஷா திரைப்படம் கொண்டிருக்கிறது. படம் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற பிறகு, சிங்கப்பூரில் கலை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில், மேடையில் தோன்றிய ரஜினி, ஆட்டோக்காரன் பாடலுக்கு நடனமாடினார். இந்தக் காட்சியை தனது யு-டியூப் பக்கத்தில் NOISE AND GRANIS நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

பழைய வீடியோ காட்சிகளை சுமார் 27 ஆண்டுகளுக்கு பின், டிஜிட்டல் மாஸ்டரிங் முறையில், ஒளிக்கலவை செய்து வெளியிடப்பட்டுள்ள ரஜினியின் நடனக் காட்சி, ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சிங்கப்பூர் விழாவில் ரஜினி பேசியதையும் வெளியிட உள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts