TamilSaaga

மூன்று மாதங்களுக்கு மூடப்படும் தேக்கா நிலையம்… ஜூலையில் வரவிருக்கும் மற்றும் சில முக்கிய மாற்றங்கள்!!

சிங்கப்பூர் அரசாங்கம் பராமரிப்பு பணிகளுக்காக, கட்டமைப்பில் பல்வேறு மாற்றங்களை அவ்வப்போது செய்து வருவது வழக்கம். எனவே, ஜூலை மாதத்தில் அதே போன்று பல்வேறு மாற்றங்களை அறிவித்துள்ளது சிங்கப்பூர் அரசு.

தமிழர்கள் அதிகமாக கூறும் பகுதி என்றால் அது தேக்கா பகுதி. தேக்கா நிலையமானது பராமரிப்பு பணிகளின் காரணமாக ஜூலை 3 முதல் மூன்று மாதங்களுக்கு மூடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. தேக்காவை சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்துவதற்காக இந்த தடையானது 3 மாத காலம் மட்டும் நீடிக்கும் என்று அறிவித்துள்ளது.

சூப்பர் மார்க்கெட்களில் வாங்கப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு, ஜூலை 1 முதல் குறைந்தது 5 சென்ட் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் உள்ள பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளான சுமார் 400 கடைகளில் இந்த கட்டண அமைப்பு நடைமுறையில் இருக்கும் என தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரின் ஆயுதப்படை, காவல்துறை மற்றும் குடிமை தற்காப்பு படை ஆகியவற்றில் வேலை செய்யும் தேசிய ஊழியர்களின் மாதாந்திர படி தொகை 125 வெள்ளி முதல் 200 வெள்ளி வரை உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளது. அவர்களின் பணிநிலைகளை பொறுத்து, சம்பள உயர்வு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

15 நகர மன்ற வட்டார குடியிருப்பாளர்கள் செலுத்தும் பராமரிப்பு கட்டணமானது அதிகரித்துள்ளது. அதாவது மக்கள் செயல் கட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள குடியிருப்பாளர்கள் வீட்டின் அளவிற்கு ஏற்ப 70 காசு முதல் 7 வெள்ளி வரை அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts