TamilSaaga

சிங்கப்பூரில் பிலிப்பைன்ஸ் ஊழியர்களை வேலைக்கு எடுக்க… இனி இது தேவையில்ல.. 7000 டாலர்கள் மிச்சம்! – நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து ‘சூப்பர்’ அறிவிப்பு – பலே.. பலே..

SINGAPORE: சிங்கப்பூரில் பிலிப்பைன்ஸ் வீட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும்போது வங்கியாளரின் உத்தரவாதமும் செயல்திறன் பத்திரமும் இனி தேவையில்லை என்று பிலிப்பைன்ஸின் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் துறை மற்றும் சிங்கப்பூரின் மனிதவள அமைச்சகம் (MOM) அறிவித்துள்ளன.

இதற்கு முன்பு வரை, சிங்கப்பூர் வேலைவாய்ப்பு agencies மற்றும் நிறுவனங்கள், பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த உதவியாளரை பணியமர்த்தும்போது S$7,000 மதிப்புள்ள செயல்திறன் பத்திரத்தை (performance bond) வாங்க வேண்டும்.

சிங்கப்பூரில் பணிபுரியும் போது பணியாளருக்கு முறையான மற்றும் நியாயமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதற்காக, அவர் பணிபுரியும் நிறுவனத்திற்கும் பிலிப்பைன்ஸ் தூதரகத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் தான் இந்த performance bond என்பதாகும்.

அந்த பணியாளர் விடுப்பு எடுத்து, பிலிப்பைன்ஸுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தாலோ அல்லது அவர் தனது பாஸ்போர்ட்டைப் புதுப்பிக்க விரும்பினாலோ இந்த performance bond என்பது அவசியம்.

மேலும் படிக்க – Exclusive : சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊர் செல்லும் பயணிகளே.. நீங்கள் TV வாங்கிச்செல்வது லாபமா? நஷ்டமா?

பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் இடையே உள்ள “ஆழமான மற்றும் நிலையான நட்பை” அங்கீகரிக்கும் முயற்சியாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இரு நாடுகளின் தரப்பில் வெளியான கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் மனிதவள அமைச்சர் டான் சீ லெங் இதுகுறித்து அளித்த பேட்டியில், செயல்திறன் பத்திரத் தேவையை நீக்கியதற்குப் பாராட்டு தெரிவித்ததோடு, நாட்டிலுள்ள அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நல்வாழ்வைப் பாதுகாப்பதில் சிங்கப்பூரின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார்.

இதுநாள் வரை சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள், பிலிப்பைன்ஸ் பணியாளர்களுக்கென தனியாக S$7,000 டாலருக்கு செயல்திறன் பத்திரமும், மலேசியர்களைத் தவிர மற்ற நாட்டினரின் பணியாளர்களுக்கென S$5,000 டாலருக்கு பாதுகாப்புப் பத்திரமும் வாங்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

இப்போது, இந்த புதிய அறிவிப்பின் காரணமாக, 7000 சிங்கப்பூர் டாலர்கள் இங்குள்ள நிறுவனங்களுக்கு மிச்சமாக உள்ளன.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts