SINGAPORE: சிங்கப்பூரில் ஒவ்வொரு வருடமும் தீபாவளி பெருவிழா, தமிழகத்தை விட ஒரு படி மேல் சிறப்பாக கொண்டாடப்படும் என்றால் அது மிகையாகாது. அதன்படி, இந்த 2022ம் ஆண்டு தீபாவளிக்கான ஏற்பாடுகள் இப்போதே தொடங்கிவிட்டன. லிட்டில் இந்தியாவில் நடத்தப்படவுள்ள சுவாரஸ்யமான பல நிகழ்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
இதில் குறிப்பாக, லிட்டில் இந்தியாவில் தெரு உணவுகளின் பிரியர்களுக்காக ஒரு மாபெரும் உணவுத் திருவிழா (Fiesta) நடத்தப்பட உள்ளது. இதில், 100க்கும் மேற்பட்ட Street Foods வகைகளை பார்வையாளர்கள் ருசித்து சாப்பிடலாம்.
தீபாவளியன்று, பிற்பகல் Birch Road-ல் நடத்தப்பட உள்ள இந்த உணவு திருவிழாவை துருக்கிய தூதரகம் மற்றும் சில உணவகங்கள் இணைந்து ஸ்பான்சர் செய்கின்றன. இந்த உணவுகள் அனைத்தும் இலவசம் என்பது ஹைலைட்.
தீபாவளி தினமான அக்டோபர் 24 அன்று லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் பாரம்பரிய சங்கம் (லிஷா) ஆகியவை, இந்த ஆண்டு தீபாவளிக்காக திட்டமிட்டிருக்கும் பல நிகழ்வுகளில் இந்த Fiesta-வும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
தளர்த்தப்பட்ட கோவிட்-19 கட்டுப்பாடுகளுடன், வரும் தீபாவளியை முன்னிட்டு செப்.16 முதல் நவம்பர் 13 முதல் நடைபெறும் கொண்டாட்டங்களை காண, லிட்டில் இந்தியாவிற்கு மக்கள் மொத்தம் ஐந்து மில்லியன் மக்கள் (50 லட்சம் மக்கள்) வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 8 மற்றும் 22 தேதிகளில் Poli @ Clive தெருவில் நடைபெறும் பாடல் மற்றும் நடன நிகழ்ச்சிகளைக் கொண்ட கலாச்சார நிகழ்வு உட்பட 12 நிகழ்வுகளின் தொடர், அக்டோபர் 1 முதல் 22 வரை நடைபெறும். முதல் நிகழ்ச்சியே தமிழ் ராப் போட்டி தான். இதில் உள்ளூர் ராப்பர் யுங் ராஜா நடுவராக பங்கேற்க உள்ளார்.
இந்திய பாரம்பரியங்களை மேம்படுத்தும் நோக்கில் புதையல் வேட்டை (treasure hunt) அக்டோபர் 8 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறும். இதில் போட்டியாளர்கள் லிட்டில் இந்தியா முழுவதும் உள்ள 10 வெவ்வேறு பகுதிகளுக்கு சுற்றித் திரிய வேண்டியிருக்கும்.