TamilSaaga

அடுத்த மூன்று மாதங்களுக்கு எந்தெந்த கட்டணங்கள் உயரும்? இவற்றையெல்லாம் பார்த்து செலவு பண்ணுங்க…

சிங்கப்பூரில் அடுத்த மூன்று மாதங்களுக்கு மின்சார கட்டணம் 3.7 % உயர வாய்ப்புள்ளது என செய்தி வெளியாகியுள்ளது. எனவே அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை குடும்பங்களுக்கான மின்சார கட்டணமானது கிலோ வாட் மணிக்கு 27.74 காசில் இருந்து 28.7 காசாக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் சேவை வரி அனைத்தையும் சேர்த்தால் 31 காசுகளாக உயரும் என தெரியவந்துள்ளது.

இதன் மூலம் நாலு அறை கொண்ட வீடுகளில் வசிப்பவர்களுக்கான சராசரி மாதாந்திர மின்சார கட்டணம் நான்கு டாலர்கள் வரை உயர வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது எரிசக்தி செலவுகள் அதிகரித்திருப்பதே இந்த கட்டணம் உயர்வுக்கு காரணம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மின்சார கட்டணமானது இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவின் செலவுகள், மின் சக்தி நிலையத்தை இயக்குவதற்கான செலவுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே கணக்கிடப்படும்.

இதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது மேற்கண்ட செலவினங்கள் அதிகரிப்பதன் காரணமாக மின் கட்டணமும் உயர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கிடையே அடுத்த மூன்று மாதங்களுக்கு எரிவாயு கட்டணமும் உயரும் என சிட்டி எனர்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. வரிகளை சேர்க்காமல் எரிவாய் கட்டணம் ஒரு கிலோ வாட் மணிக்கு 21.91 காசு இல் இருந்து 22.42 காசுகள் உயருமென கூறப்பட்டுள்ளது. எரிபொருள் விலை அதிகரித்துள்ளது இதற்கு காரணம் என சிட்டி எனர்ஜி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Related posts