TamilSaaga

ஈரோடு கூலித்தொழிலாளியின் மகன் தமிழில் ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றி…!!

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறுவது என்பதே பெரிய சாதனை தான். அதிலும் ஆங்கில வழியில் அல்லாமல் தமிழ் வழியில் தேர்வு எழுதி சாதித்துள்ளார் ஈரோட்டைச் சேர்ந்த சரவணன். இவருடைய சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்தைச் சேர்ந்த மயிலம்பாடி என்ற கிராமம் ஆகும். இவருடைய பெற்றோர்கள் கூலி வேலை செய்பவர்கள் ஆவர். ஏழ்மை வறுமை மட்டுமே சூழ்ந்திருந்த குடும்பத்தில் இருந்து தன்னுடைய படிப்பை வெளிச்சமாக கொண்டுவந்து இன்று உலகறிய சாதித்து காட்டியுள்ளார்.

பத்தாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் தமிழ் வழியில் பயின்றவர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார் சென்னை எம் ஐ டி கல்லூரியில் பிரிவை தேர்ந்தெடுத்த இவர் பொறியியல் படிப்புக்கு பின்னர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மாதம் 50 ஆயிரம் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார். நல்ல சம்பளமாக இருந்தாலும் அப்படியே வாழ்க்கையில் செட்டில் ஆகி விட வேண்டும் என்று நினைக்காமல் கலெக்டர் ஆக வேண்டும் என்ற கனவு அவர் மனதிற்குள் இருந்து கொண்டே இருந்தது.

ஏழ்மையில் வாடிய குடும்பத்திற்கு அவருடைய சம்பளம் மிகவும் உதவியாக இருந்ததால் தேவையான பணத்தை சேர்த்து விட்டு பின்பு தனது கனவை நிறைவேற்றிக் கொள்ளலாம் என தொடர்ந்து அப்பணியை செய்தார். பின்பு அவருடைய தந்தை அழைத்த நம்பிக்கையின் பெயரில் வேலையை விட்டுவிட்டு ஐஏஎஸ் கணவருக்கு தயாராக ஆரம்பித்தார். 2014 ஆம் ஆண்டு தேர்வு எழுதிய இவர் முதல் முறையிலேயே தரவரிசையில் பட்டியலில் 995 இடத்தை பெற்றவராவார். அதற்கு பின்பு இரண்டாம் முறையில் தேர்வு எழுதி ஐஏஎஸ் ஆக தேர்வானார். மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஆன அப்துல் கலாமின் வார்த்தைகளே இவரின் வெற்றிக்கு தூண்டுகோலாக அமைந்தது என கூறியுள்ளார். ஏழ்மை வெற்றிக்கு தடையல்ல என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் சரவணன் உண்மையில் இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாவார்.

Related posts