TamilSaaga

தொழிலாளர்களே தண்ணீரை பார்த்து செலவு பண்ணுங்க… தண்ணீர் கட்டணம் படிப்படியாக உயரும் என PUB அறிவிப்பு!

சிங்கப்பூரில் தண்ணீர் கட்டணம் 2025 ஆம் ஆண்டுக்குள் ஒரு கன மீட்டருக்கு 50 காசுகள் உயரும் எனஎதிர்பார்க்கப்படுகின்றது. தற்பொழுது நடைமுறையில் இருக்கும் கட்டணத்தை விட இந்த கட்டணமானது 18 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது கனமீட்டருக்கு 2.47 சிங்கப்பூர் டாலர் கட்டணமாக விதிக்கப்படும் நிலையில் 2025 ஆம் ஆண்டுக்குள் படிப்படியாக உயரும் என PUB தகவல்களை வெளியிட்டுள்ளது.

குடிமக்கள் உபயோகிக்கும் தண்ணீரை சுத்திகரிப்பு செய்வதற்கான செலவு அதிகரிப்பதே விலை உயர்வுக்கு காரணம் என PUB தெரிவித்துள்ளது. மேலும் இந்த விலை உயர்வானது இரண்டு கட்டமாக நடைமுறைக்கு கொண்டுவரப்படும் எனவும் அறிவித்துள்ளது .

முதல் கட்டமாக 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கன மீட்டருக்கு 20 காசு உயரும் எனவும் 2025 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 30 காசுகள் உயரும் எனவும் தெரிவித்துள்ளது.ஊதியம் குறைவாக உள்ள குடும்பங்களுக்கு உயர்வை சமாளிக்க அரசாங்கம் நிதி உதவி வழங்கும் எனவும் தெரிவித்துள்ளது.

Related posts