TamilSaaga

தண்ணீர் தொட்டியில் மாட்டிக்கொண்டு தவித்த குட்டிகள்.. போராடி காப்பாற்றிய பெற்றோர் – சிங்கப்பூர் இணையத்தில் இப்போ இது தான் வைரல்

குழந்தைகளை வளர்ப்பது என்பது லேசுப்பட்ட காரியமல்ல என்பதை பெற்றோர்களாகிய அனைவரும் அறிவார்கள். அதிலும் சுட்டிக்குழந்தைகள் என்றால் அந்த பெற்றோரின் பாடு, படாதபாடு தான் என்பதில் சந்தேகமே இல்லை. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல மிருங்களுக்கும் பொருந்தும்.

இந்த பதிவிலும் அப்படிப்பட்ட சில வால்தனமான குழந்தைகளையும் அவர்களை காப்பாற்ற போராடும் பெற்றோரை பற்றியும் தான் பார்க்கவிருக்கிறோம். சிங்கப்பூரில் உள்ள ஒரு இடத்தில் தேங்கியிருந்த தண்ணீருக்குள் கும்மாளம் அடிக்க சென்ற சில சிறுசுகள் அதற்கு மாட்டிக்கொண்டன. இந்நிலையில் அந்த சிறுசுகளை காப்பாற்ற பெருசுகள் படும் பாடு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நீர் நாய்களை நீங்கள் சிங்கப்பூரில் பல இடங்களில் பார்க்கலாம், பொதுவாகவே அவை கூட்டமாக செல்லும் பழக்கமுடைய விலங்குகள் தான். இந்நிலையில் சிங்கப்பூரில் ஒரு இடத்தில் குளம் போன்ற அமைப்பு ஒன்றில் குதித்துவிட்டு மீண்டும் அங்கிருந்து மேலே வரமுடியாமல் தவித்துள்ளது சில குட்டி நீர்நாய்கள்.

சிங்கப்பூரில் Cleaner வேலை பார்த்து சேர்த்த பணம்.. 50 வருஷ சேமிப்பை திருடிட்டாங்க – மோசடி ஆசாமிகளிடம் 30 லட்சம் வெள்ளியை இழந்த முதியவர்

உடனே அவற்றை மீட்க வந்த அந்த குடிகளின் பெற்றோர்கள் அந்த குட்டிகளை மீட்டு மேலே கொண்டு வருவதற்குள் மிகுந்த சிரமத்தை மேற்கொண்டுள்ளது. ஒரு முகநூல் பதிவில் வெளியான இந்த சுவாரசிய காட்சிகள் காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது என்று தான் கூறவேண்டும்.

படாதபாடுபட்டு குட்டிகளை மேல கொண்டு வர, வால்தனமான அந்த குட்டிகள் மீண்டும் தண்ணீருக்குள் புகுந்து ஆட்டம்போடுகிறது. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த பெரிய நீர் நாய்கள் அந்த தொடிட்டியில் இறங்கி குட்டிகளை மேல்நோக்கி இழுத்து போடும் காட்சிகளை நம்மால் பார்க்கமுடிகிறது.

ஒரு வழியாக இறுதியில் அனைத்து குட்டிகளையும் நீரிலிருந்து வெளியே கொண்டுவந்து அங்கிருந்து அவை அனைத்தும் நிம்மதியாக செல்கின்றன. சுட்டிக்குழந்தைகளை கையாள்வது மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் பொருந்தும் என்பதை நிரூபித்துள்ளது இந்த நிகழ்வு.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts