TamilSaaga

“சிங்கப்பூரில் சரக்கு Liftஆல் வந்த சோதனை” : சாப்பிட போனது ஒரு குத்தமா? – 3 ஆண்களின் 30 நிமிட அனுபவம்

சிங்கப்பூரில் மூன்று ஆண்கள் கடந்த ஜனவரி 3 அன்று புக்கிட் பாடோக் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலுக்குச் செல்லும் போது லிப்டில் சிக்கிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டலுக்கு சரக்குகளை ஏற்றிச்செல்லும் லிப்டை அவர்கள் பயன்படுத்தியபோது, அந்த ​​மூன்று பேரும் அந்த லிப்டிற்குள் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேல் சிக்கிக் கொண்டனர். இறுதியில் அவர்கள் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) மற்றும் கட்டிட நிர்வாகத்தால் மீட்கப்பட்டனர்.

23 வயதுடைய மூன்று ஆண்கள், அந்த தொழில்துறை கட்டிடத்தின் எட்டாவது மாடியில் அமைந்துள்ள Coexist Coffee Co-விற்குச் செல்ல திட்டமிட்டிருந்தனர். லிப்டில் சிக்கி பிறகு மீட்கப்பட்ட மூவருள் ஒருவர் மதர்ஷிப்பிடம் பேசும்போது, அந்த கட்டிடத்தில் பயணிகள் பயன்படுத்தும் லிப்ட் இருந்தும், அதற்கு அடுத்துள்ள சரக்கு லிப்டை “வேடிக்கையாக” பயன்படுத்த முடிவு செய்ததாக கூறினார். மேலும் அவர்கள் அந்த லிப்டில் ஏறுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு அந்த சரக்கு லிப்டில் இருந்து இருவர் Trolly-யுடன் வெளியேறுவதையும் அவர்கள் கண்டுள்ளனர்.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூரை சிம்மாசனத்தில் அமர்த்தியது லீ குவான் என்ற உண்மையை யாராலும் மறுக்க இயலாது.

எட்டாவது மாடியில் உள்ள அந்த Coexist Coffee Co கடைக்கு செல்ல அந்த கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இருந்து படிக்கட்டுகள் மூலம் மட்டுமே செல்ல முடியும் என்பதால், அவர்கள் லிப்டில் ஏறியதும் ஏழாவது மாடிக்கான லிப்ட் பொத்தானை அழுத்தினர். லிப்ட் நகர தொடங்கியது, ஆனால் திடீரென்று இரண்டாவது மாடியில் நின்றது. கதவுகள் திறக்கும் என எதிர்பார்த்து சிறிது நேரம் அவர்கள் நின்ற நிலையில் தான் அவர்கள் லிப்ட் சிக்கியதை உணர்ந்தனர். மூன்று பேரும் லிப்டில் மாட்டிக்கொண்டார்கள் என்று தெரிந்ததும், அவர்களில் ஒருவர் பீதியடையத் தொடங்கினார்.

ஆனால் மற்ற இரு ஆண்களில் ஒருவர், நிலைமையை நினைத்து பதறாமல் மிகவும் அமைதியாக இருந்தார். மற்றவர்களுக்கு லிப்டில் ஏதேனும் தொடர்புத் தகவல் உள்ளதா என்று தேட அறிவுறுத்தி தானும் தேடியுள்ளார். அதே போல் லிப்ட் அலாரத்தை அடிக்கவும் அறிவுறுத்தினார். லிப்ட் மீண்டும் நகரும் என்ற நம்பிக்கையில் லிப்டில் உள்ள பொத்தான்களை அழுத்தவும் முயற்சித்தனர். பொதுவாக லிப்ட் பயணத்தில் செல்போன் இணைப்பு கிடைப்பது கடினம் என்றபோதும் மூவரில் ஒருவருக்கு செல் வேலை செய்துள்ளது. உடனடியாக அவர்கள் கஃபே மற்றும் கட்டிட நிர்வாகத்தை அழைக்க முயன்றனர், ஆனால் அவர்களை அணுக முடியவில்லை.

இதையும் படியுங்கள் : “குடும்ப வறுமையால் அப்படி செஞ்சுட்டேன்” : சிங்கப்பூரில் மூதாட்டியை ஏமாற்றி பணம் எடுத்த பணிப்பெண் – முடிவு சிறை

ஏறக்குறைய அனைத்து வழிகளையும் கையாண்ட பிறகு, அந்த கஃபே-வின் மதிய உணவு அவர்களுக்காகக் காத்திருந்ததால், அந்த மூவரும் SCDFன் உதவியைப் பெற முடிவு செய்து, 995 ஐ அழைத்தனர். உதவி வரும் வரை காத்திருந்தபோது, ​​லிப்டில் சிக்கிக் கொண்டவர்கள் வீடியோ மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர், அவர்கள் சில குழந்தை பருவ விளையாட்டுகளையும் விளையாடினர்: அவர்கள் இறுதியாக வெளியில் இருந்த SCDF அதிகாரிகளிடமிருந்து பதில் கிடைத்தது, அவர்களை அமைதியாக இருக்கச் சொன்னார்கள் மற்றும் அவர்கள் வெளியில் இருந்து கதவுகளின் முதல் அடுக்கைத் திறக்க முடிந்தது. ஒரு லிப்ட் டெக்னீஷியனும் உதவிக்கு வரவழைக்கப்பட்டார்.

இறுதியில், ஆண்கள் மீட்கப்பட்டனர் மற்றும் அவர்கள் நலமாக இருப்பதாக SCDF மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்க கீழே திரும்பிச் சென்றனர். மீண்டும் தங்கள் மத்திய உணவை உண்ண பயணிகள் லிப்ட் பயன்படுத்தி மாடிக்கு சென்றனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts