TamilSaaga

நவம்பர் 1 முதல் சிங்கப்பூரர்களை வரவேற்க தயாராகும் அடுத்த நாடு : ஆனால் தாயகம் வரும்போது SHN அவசியம்

வரும் நவம்பர் 1, 2021 முதல் சிங்கப்பூர் மற்றும் குறைந்தபட்சமாக ஒன்பது நாடுகளிலிருந்து முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட மக்களுக்காக தாய்லாந்து அதன் கதவுகளைத் திறக்கும் என்று அந்நாட்டு பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா கூறியுள்ளார். பாங்காக் போஸ்ட் அளித்த தகவல்படி, ஐக்கிய இராச்சியம், ஜெர்மனி, சீனா மற்றும் அமெரிக்காவை ஆகிய நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் தனிமைப்படுத்துதல் இல்லாமல் உள்ளே நுழையக்கூடிய அனுமதி வழங்கப்பட்டும்.

நவம்பர் 1 முதல் தடுப்பூசி போடப்பட்டு குறைந்த ஆபத்துள்ள நாடுகளிலிருந்து விமானம் மூலம் மக்கள் வருகை தருவது குறித்து ஆராய CCSA (கோவிட் -19 சூழ்நிலை நிர்வாக மையம்) மற்றும் பொது சுகாதார அமைச்சகம் இந்த வாரத்திற்குள் அவசரமாக பரிசீலிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன் என்றும் பிரதமர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. பயணிகள் PCR சோதனையின் முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் வந்தவுடன் மற்றொரு சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

தற்போது, ​​சிங்கப்பூரிலிருந்து வரும் பயணிகள் தடுப்பூசி போடப்பட்டிருந்தால் ஏழு நாட்களுக்கு குறையாமலும் அல்லது தடுப்பூசி போடப்படாவிட்டால் 10 நாட்களும் தனிமைப்படுத்தல் செய்ய வேண்டும். அதேபோல ஃபூக்கெட் அல்லது சாமுய் சாண்ட்பாக்ஸ் மூலம் நாட்டிற்குள் நுழைய விண்ணப்பிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு விதிவிலக்குகள் வழங்கப்படலாம். மேலும் தற்போதைய நிலவரப்படி, தாய்லாந்திலிருந்து சிங்கப்பூர் திரும்பும் பயணிகள் இன்னும் SHN சேவையை மேற்கொள்ளவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாங்காக் போஸ்ட்டின் தகவல்படி, இந்த உலகளாவிய தொற்றுநோய் சர்வதேச பயணத்தை தடை செய்வதற்கு முன்பு, தாய்லாந்தின் பொருளாதாரத்தின் முக்கிய உந்துசக்தியாக இருந்தது சுற்றுலா என்றும், அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 20 சதவிகிதம் இடத்தை வகித்தது என்றும் கூறப்பட்டுள்ளது. அக்டோபர் 10 நிலவரப்படி, தாய்லாந்து ஏழு நாள் சராசரியாக 10,493 நோய்த்தொற்றுகளைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Related posts