TamilSaaga

சிங்கப்பூர் வேலைக்கு வர இதை மட்டும் செய்யாதீங்க… SPassல் இத தெரிஞ்சிக்காம சிங்கப்பூருக்கும் வராதீங்க.. இத படிங்க அப்புறம் எடுங்க முடிவ!

சிங்கப்பூரில் சென்று வேலை செய்து விட்டால் ராஜாவாகி விடலாம் என்ற எண்ணத்தில் பலரும் ஒரு ஏஜென்ட்டினை பிடித்து லட்சங்களில் காசினை கொடுத்து ப்ளைட் ஏறி வந்து விடுகின்றனர். ஆனால் இதில் ஒரு சிலருக்கு இதில் இருப்பது எவ்வளவு பெரிய பிரச்னையாக அமைகிறது என்பதை தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

சிங்கப்பூரில் இருக்கும் பெரிய சம்பளத்தினை கொடுக்கும் இரண்டு பாஸ்களில் ஒன்று spass எனத்தான் நம்மில் பலருமே நினைத்து கொண்டு இருக்கிறோம். ஆனால் இதில் கூட மிகப்பெரிய கஷ்டமும் இருக்கிறது என்பதை அதில் இருக்கும் ஊழியர்களுக்கு தான் தெரியும்.

இதையும் படிங்க: சிங்கையில் வேலை செய்யும் ஊழியரா நீங்க… அப்போ நீங்க WICA பத்தி மிஸ் பண்ணாம தெரிஞ்சிக்கோங்க… ரொம்ப முக்கியமுங்கோ!

கடந்த செப்டம்பரில் இருந்து சிங்கப்பூரில் SPassல் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் வரை சிங்கப்பூரில் வேலை செய்து வந்த SPassக்கு 2500 சிங்கப்பூர் டாலர் சம்பளமாக கொடுக்கப்பட வேண்டும் என்கிறது சிங்கை மனிதவளத்துறை. ஆனால் இதில் பெருவாரியான நிறுவனங்கள் அப்படி கொடுப்பது இல்லை என்பதே உண்மை. அதிகப்பட்சமாக SPassக்கு கூட 1200 சிங்கப்பூர் டாலர் வரை தான் கொடுக்கப்படுவதாக தெரிகிறது.

அதிகமாக OT பார்த்தால் மட்டுமே $1800 வரை சம்பளமாக சில ஊழியர்கள் பெறுவதாக கூறப்படுகிறது. ஆனால் அந்தந்த நிறுவனங்கள் அவர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பதாகவே கணக்கு காட்டப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இது எல்லா நிறுவனங்களும் இல்லை. குறிப்பிட்ட சில நிறுவனங்களில் இந்த பிரச்னைகள் தான் இன்னமும் இருக்கிறது.

தமிழ்நாட்டில் இருந்து நல்ல பணி அனுபவத்துடன் சிங்கப்பூர் வேலைக்கு வருபவர்களுக்கு 2000 சிங்கப்பூர் டாலர் வரை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பளத்தில் இருக்கும் இடம் SPassக்கு அந்தந்த ஊழியர்களே தான் பார்த்து கொள்ள வேண்டும். 25ல் இருந்து 30 சதவீத கம்பெனி தங்கள் ஊழியர்கள் தங்கும் இட வசதியை செய்து கொடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் வொர்க் பெர்மிட்டில் இருந்து SPass மாறணுமா? 3000 சிங்கப்பூர் டாலரில் சம்பளம்.. செம வாழ்க்கை… இத படிங்க!

இது மிகப்பெரிய தொகையாக இருக்கும் என்பதால் சாப்பாடு, அன்றாட செலவுகள் போக உங்களால் வீட்டுக்கு 700 முதல் 800 சிங்கப்பூர் டாலர் மட்டுமே அனுப்ப முடியும். தற்போதைய சூழலில் 4 முதல் 5 லட்சம் வரை SPassக்கு ஏஜெண்ட் கட்டணமாக வாங்கப்படுகிறது. அப்போது உங்க கடனை அடைக்கவே 2வருடம் கூட ஆகும். இதுவும் சிக்கனமாக இருப்பவர்களால் தான் முடியும்.

பெரும்பாலும் சிங்கப்பூர் வர கடனை வாங்கவே வாங்காதீர்கள். சேமிப்பில் வரவே உங்களுக்கு நல்லதாக இருக்கும். அதுவும் கஷ்டம் என நினைப்பவர்கள். முறையான ஏஜென்ட்டை பிடித்து கட்டணத்தை குறைத்து பேசுங்கள். மேலும் உங்களுக்கு ipaல் சொல்லப்பட்ட சம்பளம் கொடுக்கப்படுமா என்பதை பலமுறை பேசி உறுதி செய்து கொள்ளுங்கள்.

SPassல் வருபவர்கள் நேரடியாக வருவதற்கு முன்னர் ஆன்லைன் மூலமாக தேடிப் பாருங்கள். உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் அல்லது கம்பெனியில் வேலை செய்வர்களை வைத்து நேரடியாக Resume கொடுத்து வேலை தேடி பாருங்க. இந்த வழிகளில் செலவுகள் குறைவு என்றாலும் கிடைப்பதற்கு பல நாட்கள் கூட எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கடனை மட்டும் வாங்காதீங்க!

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts