TamilSaaga

சிங்கப்பூர் வேலைக்காக ஏஜென்ட் லட்ச ரூபாய் கட்டணமாக கேட்கிறார்களா? ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க இத படிங்க!

சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்லும் எல்லாருக்குமே முதல் படியாக இருப்பது ஏஜென்ட்கள் தான். அவர்கள் தான் சிங்கப்பூரில் ஒரு வேலையை பார்த்து கொடுப்பார்கள். ஆனால் பாஸுக்கு ஏற்றவாறு கட்டணம் மட்டும் லட்சத்தில் இருக்கும். இதற்கு பயந்தே பலரும் ஏகத்துக்கும் கடனை வாங்கி தான் சிங்கப்பூர் வந்திருப்பார்கள்.

சிங்கை மனிதவளத்துறை இந்த வேலை பாஸ்களுக்கு ஏஜென்ட் கட்டணம் நிர்ணயித்து இருக்கிறது தெரியுமா? அதுகுறித்த தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

MOM கூற்றுப்படி, ஏஜென்ட் கட்டணம் ஊழியர் வாங்க இருக்கும் ஒரு மாத சம்பளம் மட்டுமே இருக்க வேண்டும். அதிகபட்சமாக இரண்டு மாத சம்பளம் கட்டணமாக வாங்கலாம். ஊழியரின் ஒவ்வொரு வருட வேலை பாஸுக்கும் அல்லது வேலை ஒப்பந்தம் எதில் குறைவாக வருகிறது என்பதை கருத்தில் கொண்டு கட்டணம் அமைய வேண்டும்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் 10 நாட்களுக்குள் வேலைக்கு வர வாய்ப்பு தரும் TEP… ஆனா 3 மாதத்திற்குள் இதை கண்டிப்பாக செய்ய வேண்டுமாம்… என்ன சம்பளம் கிடைக்கும்?

சிங்கப்பூரில் உங்களுக்கு கொடுக்கப்பட இருக்கும் அடிப்படை சம்பளம் மற்றும் மாதாந்திர படிகள் ஆகியவை மட்டுமே சிங்கப்பூர் ஏஜெண்ட் வாங்க வேண்டும். அதிக பட்ச சம்பளம் இரண்டு மாதமாக இருக்கலாம். இந்தியாவில் இருக்கும் ஏஜென்ட் வைத்து கொள்ளும் கட்டணம் இதில் சேராது.

வாங்கப்படும் ஏஜென்ட் கட்டணம் 2 மாத சம்பளத்தினை விட அதிகமாக இருந்தால், கட்டணம் யாருக்கு செல்கிறது என்பதை முதலில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும், ஏஜென்ட் உங்களிடம் இருந்து வாங்கும் ஒவ்வொரு ரூபாயிற்கு கூட ரசீது கொடுக்கப்பட வேண்டும். அப்படி ரசீது வாங்கி வைத்து கொள்வதால் பின்னாட்களில் உங்களுக்கு உதவியாக இருக்கும். சிங்கப்பூர் ஏஜென்ட் கொடுக்கும் ரசீதிலும் உங்கள் ஏஜென்ட் பெயர் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்கள் வேலைகளில் பிரச்னை ஏற்படும் போது கட்டணத்தினை திருப்பி தர அந்த ரசீதை வைத்து தான் MOM முடிவு செய்யும்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் SPassல் இருக்கும் ஊழியரா நீங்க… EPassல் மாறணுமா? இந்த சிம்பிள் வழியை Follow பண்ணுங்க

வேலை ஒப்பந்தம் கொடுக்கப்பட்ட காலக்கெடுக்கு முன்னரே 6 மாதத்திற்குள் கம்பெனி நிர்வாகம் வேலையை விட்டு நீக்குகிறது. அப்படி ஒரு சூழ்நிலை வந்தால், ஏஜென்ட் உங்களிடம் இருந்து வாங்கிய 50 சதவீதம் கட்டணத்தினை திருப்பி கொடுக்க வேண்டும் என்பது MOMன் கட்டுப்பாடு.

சிங்கப்பூர் வரும் ஏஜென்ட்டிடம் ஏற்படும் கட்டண பிரச்னைக்கு மட்டுமே MOM உதவி செய்யும். உங்க சொந்த ஊர் ஏஜென்ட் பிரச்னை ஏற்படும் போது அதற்கு MOMஆல் எந்த தீர்வும் தர முடியாது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts