TamilSaaga

சிங்கப்பூரில் குடித்துவிட்டு லாரியை ஓட்டிய டிரைவர்… விபத்தில் சிக்கி உணவு Food Delivery ஊழியர் பலி – உயிரை காவு வாங்கிய போதை!

SINGAPORE: உணவு டெலிவரி செய்யும் நபர் ஒருவர், Hougang பகுதியில் நடந்த விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து Straits Times வெளியிட்டுள்ள செய்தியில், சிங்கப்பூரின் Hougang பகுதியில் உள்ள Buangkok Green-ல், 45 வயது மதிக்கத்தக்க உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவர் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியே வந்த லாரி ஒன்று இவரது பைக் மீது மோதியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், “கடந்த வியாழன் இரவு 8 மணியளவில் புவாங்காக் கிரீன் பகுதியில் செங்காங் கிழக்கு சாலையில் விபத்து நடந்ததாக எங்களுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது” என்றனர்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், “லாரியை ஓட்டி வந்த 54 வயது மதிக்கத்தக்க நபர், குடித்துவிட்டு வாகனம் இயக்கியது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்த பிறகு, உடனடியாக அந்த நபர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதே அவர் சுயநினைவின்றி இருந்தார். பிறகு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் இதே போன்றொதொரு சாலை விபத்தில் உணவு டெலிவரி செய்யும் இளம் ஊழியர் ஒருவர் உயிரிழந்தது நினைவிருக்கலாம்.

Jason Tan எனும் அந்த ஊழியரின் மனைவின் கர்ப்பமாக இருந்ததால், பிரசவத்துக்கு பணம் சேர்க்கும் நோக்கத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வேலை பார்த்த போது, விபத்தில் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே பலியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க – “பிரசவத்துக்கு பணம் சேர்க்கணும்.. Sunday-வும் ரெஸ்ட் எடுக்காத”.. வேலைக்கு போகலை-னு சொன்ன புருஷனை அனுப்பி வச்சு நானே கொன்னுட்டேன்” – சிங்கப்பூரையே கலங்க வைத்த விபத்தின் பின்னணி

இப்போது, மற்றொரு உணவு டெலிவரி செய்யும் ஊழியர் சிங்கப்பூரில் தனது உயிரை இழந்திருக்கிறார்.

Related posts