WICA: சிங்கப்பூரில் வேலை செய்து வரும் ஊழியர்களுக்கு பணியில் இருக்கும் போது விபத்து ஏற்பட்டால் இழப்பீட்டு தொகை வாங்கி தருவது தான் WICA. ஊழியர்களுக்கு எவ்வளவு இழப்பீடு இருக்கும் என்று நீங்க தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்க.
WICA:
Work Injury Compensation Act (WICA) என்பது பொதுவாக சட்டத்தின் கீழ் ஒரு சிவில் வழக்கைத் தாக்கல் செய்யாமல், வேலை தொடர்பான காயங்கள் அல்லது நோய்களுக்கான உரிமைகோரல்களை ஊழியர்களுக்கு பெற்று தருகிறது. இழப்பீடு கோரிக்கைகளைத் தீர்ப்பதற்கு பொதுவான சட்டத்திற்கு இது விரைவான மாற்றாக கருதப்படுகிறது.
நீங்கள் வேலை நேரத்தில் விபத்தில் காயமடைந்தாலோ அல்லது வேலையின் காரணமாக நோயால் பாதிக்கப்பட்டாலோ WICA இன் கீழ் உரிமை கோரலாம். WICA உரிமைகோரலை தாக்கல் செய்ய நீங்கள் ஒரு வழக்கறிஞரை வைக்க வேண்டியதில்லை.
WICAல் யார் உரிமை கோர முடியாது:
*Independent contractors மற்றும் சுயதொழில் செய்பவர்கள்.
*வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள்
*சிங்கப்பூரில் இருக்கும் ஆயுதப்படை, காவல்துறை, சிவில் Defence படையினர், போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள்
இதையும் படிங்க: சிங்கப்பூருக்கு வேலை கேட்டு அலுத்து போயிட்டீங்களா? Chill பண்ணுங்க.. நீங்களே வேலைக்கு Apply பண்ணலாம்… பிடிச்ச வேலையும் தட்டி தூக்குலாம்
WICAல் யார் வழக்கு தொடரலாம்:
*இனி குறிப்பிட்ட அந்த முதலாளியிடம் வேலை செய்ய மாட்டீர்கள் அல்லது உங்கள் பணி அனுமதி ரத்து செய்யப்பட்டு இருக்கலாம்.
*நீங்கள் வெளிநாட்டு வேலையில் இருந்தபோது விபத்து நடந்தது.
*வீட்டிலிருந்து வேலை செய்யும் போது அல்லது உங்கள் முதலாளியிடம் நீங்கள் ஒப்புக்கொண்ட வேலையின் போது விபத்து ஏற்பட்டு இருந்தால் உரிமை கோர முடியும்.
விபத்தின் வகை:
*வீட்டிற்கும் பணியிடத்திற்கும் இடையே நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பேருந்தில் செல்லும் போது விபத்தை சந்தித்து இருக்கலாம். ஆனால் நீங்கள் தனியாக பொது போக்குவரத்தில் செல்லும் போது இது செல்லாது.
*போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல், பணிக்கு செல்லும் போது போக்குவரத்து விபத்தைச் சந்தித்தால் இழப்பீடு கிடைக்கும்.
*கப்பல் இருக்கும் இடத்தைப் பொருட்படுத்தாமல், சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட கப்பலில் பயணம் செய்யும் போது, வேலை சம்பந்தமான காயத்தால் பாதிக்கப்படும் ஒரு மாலுமிக்கு WICAல் இழப்பீடு கிடைக்கும்.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் 10 நாட்களுக்குள் வேலைக்கு வர வாய்ப்பு தரும் TEP… ஆனா 3 மாதத்திற்குள் இதை கண்டிப்பாக செய்ய வேண்டுமாம்… என்ன சம்பளம் கிடைக்கும்?
*வேலை தொடர்பான சண்டையில் நீங்கள் பாதிக்கப்பட்டு, போராட்டத்தில் கலந்து கொள்ளாதது, அல்லது தனிப்பட்ட தற்காப்புப் பயிற்சியின் போது காயம் அடைந்து இருந்தாலும் WICAன் கீழ் இழப்பீடு கிடைக்கும்.
*வேலை காரணமாக ஏற்படும் மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற நோயால் பாதிக்கப்பட்டாலும் இழப்பீடு கிடைக்கும்.
இழப்பீடு எப்படி கிடைக்கும்:
*மருத்துவ விடுப்பில் இருக்கும் போது சம்பளம்
*மருத்துவ செலவுகளுக்கான இழப்பீட்டு தொகை
- ஊனம் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டால் மொத்தமான இழப்பீட்டு தொகை
மருத்துவ விடுப்பில் இருக்கும் போது முதல் 60 நாட்களுக்கு உங்களின் சம்பளம் மொத்தமாக கொடுக்கப்பட்டு விடும். விபத்து நடந்த அடுத்த 61வது நாளில் இருந்து ஒரு வருடம் வரை 3ல் 2 மடங்கு சம்பளம் மட்டுமே கொடுக்கப்படும்.
விபத்து நடந்து ஒரு வருடத்திற்குள் இழப்பீடு கோரப்பட்டால் அதிகபட்சமாக 45000 சிங்கப்பூர் டாலர் மருத்துவ செலவுகளுக்காக கொடுக்கப்படும்.
பணியின் போது ஏற்பட்ட விபத்தில் ஒரு ஊழியர் இறக்கும் போது அவருக்கு இழப்பீடு தொகை பின்வருமாறு இருக்கும்.
1 ஜனவரி 2020 முன் | 1 ஜனவரி 2020ல் இருந்து | |
குறைந்தபட்சம் | $69,000 | $76,000 |
அதிகபட்சம் | $204,000 | $225,000 |
பணியின் போது ஏற்பட்ட விபத்தில் ஒரு ஊழியருக்கு மொத்தமாக ஊனம் அல்லது நோய் ஏற்படும் போது அவருக்கு இழப்பீடு தொகை பின்வருமாறு இருக்கும்.
1 ஜனவரி 2020 முன் | 1 ஜனவரி 2020ல் இருந்து | |
குறைந்தபட்சம் | $88,000 | $97,000 |
அதிகபட்சம் | $262,000 | $289,000 |