TamilSaaga

சிங்கப்பூர் விசிட் மூலம் சீனாவுக்கு “செக்”.. கமலா ஹாரிஸ் “மாஸ்டர் மைண்ட்” – பின்னணி என்ன?

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆசிய நாட்டிற்கான தனது முதல் உத்தியோகபூர்வ பயணத்தை கடந்த ஞாயிற்று கிழமை தொடங்கினர். நமது சிங்கப்பூர் வெளியுறவு துறை அமைச்சர் கமலா ஹாரிஸ் அவர்களை வரவேற்றார். அதனை தொடர்ந்து பிரதமர் லீ மற்றும் துணை பிரதமர் ஹலீமா யாக்கோப் ஆகியோரை சந்தித்து உரையாற்றினார் கமலா ஹாரிஸ்.

இந்நிலையில் நமது சிங்கப்பூர் அமெரிக்க நாட்டின் ஒப்பந்தரீதியான கூட்டாளி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சிங்கப்பூர் அமெரிக்காவுடன் மிக ஆழமான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தி பிராந்தியத்தில் அமெரிக்காவின் வலுவான பாதுகாப்பு பங்காளி நாடாக திகழ்ந்து வருகின்றது என்றால் அது சற்றும் மிகையல்ல. அதே சமயத்தில் சிங்கப்பூர், சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிடமும் நட்புறவாக இருந்து வருகின்றது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளை ஒப்பிடும்போது மிகப்பெரிய துறைமுகம் நமது நாட்டில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் அந்த பகுதியில் தொடர்ந்து இலவச வழிசெலுத்தலை ஆதரிக்கிறது
நமது சிங்கப்பூர். அதேசமயம் இங்கு சீனா அதிக உறுதியுடன் வளர்ந்து வருகிறது என்பதும் நினைவுகூரத்தக்கது. இந்நிலையில் 7 நாள் ஆசிய பயணமாக கடந்த ஞாயிறு அன்று கமலா ஹாரிஸ் சிங்கப்பூர் வந்தடைந்தார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவின் Congressional Research Service வெளியிட்ட ஆய்வின்படி சிங்கப்பூர், ஆசியாவில் அதிக அளவிலான அமெரிக்க ஈடுபாட்டை ஊக்குவித்துள்ளது என்றும். அதேசமயம் சீனாவின் எழுச்சியை ‘கட்டுப்படுத்தும்’ முயற்சிகள் எண்ணத்தக்கவை என்றும் எச்சரித்ததாக கூறியுள்ளது. மேலும் சிங்கப்பூர் இயல்பாகவே சீனாவிடம் நல்ல நட்புறவை பாதுகாத்து வருகின்றது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த சிங்கப்பூர் வெளியுறவு துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் சிங்கப்பூர் வரும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவர்களிடம் இரு நாடுகளுக்கு இடையேயான டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் இணைய பாதுகாப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறினார்.

ஆசிய மேம்பட்டு வங்கியின் முன்னாள் அமெரிக்க தூதரான கர்டிஸ் சின் “அமெரிக்காவிற்கும், ஆசியாவிற்கும் ஒரு வணிக மையம் உள்பட அனைத்து முன்னுரிமையும் தேவை என்றும். சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் ஆகிய இரு நாடுகளும் அந்த திட்டத்தின் முக்கிய அங்கங்களாக இருக்க முடியும்” என்று கூறினார். இந்நிலையில் சிங்கப்பூர் வந்துள்ள கமலா ஹாரிஸ் அவர்களின் முக்கிய கடமையாக சிங்கப்பூர் மற்றும் வியட்நாமில் உள்ள முக்கிய தலைவர்களை தென்கிழக்கு ஆசியாவுக்கான வாஷிங்டனின் உறுதிப்பாடு உறுதியானது என்பதை உறுதிப்படுத்துவதாகவும்.

Related posts