TamilSaaga

சிங்கப்பூரில் அமலாகும் தளர்வுகள்.. குறைக்கப்படும் SDA அதிகாரிகள்.. இனி அவர்களின் நிலை என்ன? கைகொடுத்த சிங்கை அரசு!

சிங்கப்பூரில் நாளை செவ்வாய்கிழமை (ஏப்ரல் 26) முதல் சிங்கப்பூர் தனது உள்ளூர் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதால், சிங்கை முழுவதும் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பாதுகாப்பான தொலைதூரத் தூதர்களின் (SDA) எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

சிங்கப்பூரை பொறுத்தவரை பொருளாதாரம் தொடர்ந்து மீண்டு வருவதால், இந்த ஆட்குறைப்பின் மூலம் நீக்கப்படும் SDA-க்கள் மற்ற துறைகளுக்கு செல்ல அரசு ஆதரவு அளிக்கும் என்று நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் (MSE) நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 24) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சுமார் 2,000 SDAக்கள் தற்போது பல்வேறு அரசு நிறுவனங்களில் பணிபுரிகின்றனர் என்று அமைச்சகம் மேலும் கூறியுள்ளது. வேலை வாய்ப்பு தேவைப்படுபவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என்றும் MSE தெரிவித்துள்ளது.

“கோவிட்-19 தொற்றுநோய்களின் போது சிங்கப்பூரைப் பாதுகாப்பாக வைத்திருப்பதில் அயராத முயற்சிகள் மற்றும் பங்களிப்புகளுக்காக எங்கள் அனைத்து SDAக்கள் மற்றும் EOகளுக்கும் நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்,” என்று MSE கூறியது.

ஜன்னலை கூட மின்னல் தாக்குமா?.. சிங்கப்பூரில் நடந்த “அபூர்வ நிகழ்வு”.. ஆளுக்கொரு கருத்தை முன்வைக்கும் நெட்டிசன்கள் – உண்மையில் நடந்தது என்ன?

நாளை முதல் பல தளர்வுகள் அமலுக்கு வந்தாலும், பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகள் (SMMs) இன்னும் சில இடங்களில் அமலில் தான் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அத்தகைய நிலையில் விதி மீறல்கள் பற்றிய சோதனைகள் மற்றும் விசாரணைகளை நடத்த அமலாக்க அதிகாரிகள் (EOக்கள்) பணியில் இருப்பார்கள் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் 735கி ஹெராயின் கடத்தல்.. ஒரு பெண்மணி உள்பட 4 முதியவர்கள் கைது – “இரும்புக்கரம்” கொண்டு விசாரிக்கும் CNB

நடைமுறையில் உள்ள SMMகளுக்கு இணங்காத தனிநபர்கள் மற்றும் வளாகங்களை நடத்துபவர்களுக்கு எதிராக உறுதியான அமலாக்க நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts