TamilSaaga

“வெளிநாட்டில் வேலை” : தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு – எப்படி பதிவு செய்வது? எவ்வளவு சம்பளம்? Full ரிப்போர்ட்

தமிழக முதல்வரின் அறிவுரைப்படி தமிழ் மக்களுக்கு உடனடியாக அயல்நாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத்தர அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வெளியிட்ட அறிக்கையில், வெளிநாட்டில் பணி அமர்த்த பல்வேறு நாடுகளின் ஆட்சேர்ப்பு நிறுவனங்களை தொடர்பு கொண்டதில் தற்பொழுது கீழ்கண்ட பணியிடங்களுக்கு தேவை பட்டியல் வந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது (044-22505886 / 22502267). மேற்காணும் வேலைவாய்ப்பு விவரங்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் முனைவர் மகேஸ்வரன் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மேற்குறிப்பிட்ட பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், இந்நிறுவன வலைதளமான www.omcmanpower.comல் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்ட அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் முகவரி எண்.RC.No. B.0821/CHENNAI/CORPN/1000.5/308/84 ஆகும்.

மேலும் தமிழ்நாடு அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டு ஆட்சேர்ப்பு நிறுவனங்களின் சுரண்டல்களிலிருந்து வெளிநாட்டு வேலைநாடுநர்களை பாதுகாக்கவும் மற்றும் குறைந்த செலவில் பணியமர்த்தவும் கடந்த 1978ம் ஆண்டு தமிழக அரசால் துவங்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிறுவனம் வெளிநாட்டு வேலைக்கு தேர்வு செய்யப்பட்டோருக்கு சான்றிதழ், சான்றொப்பம், விசா பெறுவதற்கு உதவி புரிதல் மற்றும் வெளிநாடு செல்வதற்கு தேவையான பயண ஏற்பாடுகள் மேற்கொள்வதில் ஆகிய பணிகளை செய்து வருகிறது. இந்நிறுவனம் இதுவரை 10,350 நபர்களை பல்வேறு வெளிநாட்டு வேலைகளில் பணியமர்த்தி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் உள்ள மருத்துவமனைக்கு மாத ஊதியம் 2,00,00 முதல் 2,50,000 வரை சம்பளம் பெறுமானமுள்ள (டிப்ளமோ மற்றும் பட்டதாரி ஆண்-பெண்) 300 முதல் 500 செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 30 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட GCC ஓட்டுனர் உரிமம் பெற்றவர்களுக்கு குவைத் நாட்டில் பணிபுரிய தேவைபட்டியல் வந்துள்ளது. மாத ஊதியமாக 27,000 முதல் 34,500 வரை வழங்கப்படும்.

அரபு உணவு வகைகளை சமைக்க ஆண் சமையல்காரர்கள் தேவைப்பட்டியல் பெறப்பட்டுள்ளது. சமையல்காரர்களுக்கு மாத ஊதியம் 37,000 வழங்கப்படும். குவைத் நாட்டில் வீட்டில் வேலை செய்ய 30 முதல் 40 வயது வரை உள்ள பெண் பணியாளர்கள் தேவைப்பட்டியல் பெறப்பட்டுள்ளது. மாத ஊதியம் 29,640 முதல் 32,000 வழங்கப்படும்.

Diploma in Mechanical Engineering/ITI Fiter தேர்ச்சி பெற்று 22 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட பணிபுரிய Casting/ Inspection/Machine Operatorகள் ஓமன் நாட்டிற்கு தேவைப்பட்டியல் வந்துள்ளது. மாத சம்பளம் 29000 வழங்கப்படும். மேற்படி சம்பளம் சேர்க்காமல் பணியாளர்களுக்கு உணவு, இருப்பிடம், விமானப்பயணச் சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலை அளிப்பவர்களால் தனியாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணி காலி இடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவனம் வலைத்தளமான www.omcmanpower.comல் அப்போது பதிவேற்றம் செய்து வருகின்றது. ஆகவே வெளிநாட்டில் வேலை செய்ய விருப்பமுள்ளவர்கள் இந்நிறுவன வலைதளத்தில் தங்கள் விவரங்களை பதிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தேவைப்படும் மனித வளத்தினை அளிப்பதற்கும் தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதற்கும் இந்நிறுவனம் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts