கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 28 அன்று மாலை ஜூரோங் ஈஸ்ட் அவென்யூ 1 வழியாக சாலையைக் கடக்கும் மூன்று பாதசாரிகளைக் நூலிழையில் கடந்து செல்லும் ஒரு பேருந்து குறித்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவப்பு விளக்கு எரிந்துகொண்டிருந்தும் அந்த பேருந்து அதிவேகமாக கடந்து செல்லும் அந்த காட்சி தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. அந்த பேருந்து ஓட்டுநரின் செயலும் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த சம்பவத்தின் Dashcam காட்சிகளை Beh Chia Lor என்ற முகநூல் குழு பகிர்ந்துள்ளது. (Video Curtsey – Beh Chia Lor Facebook Page)
“இந்தத் தவறை நாங்கள் மிகவும் தீவிரமாகப் பார்க்கிறோம், மேலும் பேருந்து கேப்டனுக்கு எதிராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுப்போம்” என்று டான் மேலும் கூறினார்.