TamilSaaga

ஹாய்… வி ஆர் காலிங் ப்ரம் MOM… இப்படி யாரும் கால் பண்ணுறாங்களா… அப்போ நீங்க ஜாக்கிரதையா இருக்க வேண்டிய நேரமிது!

சிங்கப்பூர் எப்போதுமே ஊழலுக்கு எதிரான நாடாகவே இன்று வரை இருந்து வருகிறது. ஆனால் இங்கும் சிலர் அதை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதற்கு சமீபத்திய பிரச்னை உதாரணமாகி இருக்கிறது. இதை தெரிந்து கொண்டால் உங்களுக்கும் இந்த தொல்லை உருவாகும் போது எளிதில் தப்பித்து கொள்ள முடியும்.

சிங்கப்பூர் மனிதவளத்துறை என்பது பலராலும் MOM என அழைக்கப்பட்டு வருகிறது. வேலை செய்யும் ஊழியர்களுக்கு அனைத்து வகையில் ஏற்படும் பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு கிடைக்கும் இடம் இது தான். வெளிநாட்டு ஊழியர்களுக்கு என்னென்ன வொர்க் பாஸ் இருக்க வேண்டும். அதில் கொடுக்கப்படும் கட்டுப்பாடுகள் வரை அனைத்தையும் நிர்வகிப்பது தான் இவர்களின் முதற்கட்ட பணி. இது அனைவருக்கும் தெரிந்த சேதி தான்.

இதையும் படிங்க: டிகிரி படித்தவர்களும், படிக்காதவர்களும் ரெடியாக இருங்க… உங்களுக்கு சிங்கப்பூரில் சூப்பர் வேலை கிடைக்க இதை Follow பண்ணுங்க…

ஆனால் சமீபத்தில் MOMல் இருந்து ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதில் மனிதவள அமைச்சகத்தினை போல ஆள்மாறாட்டம் செய்ய முயலும் நபர்களிடம் இருந்து சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்புகள் பொதுமக்களுக்கு வந்திருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

MOM எனக் கூறப்படும் மோசடி தொலைபேசி அழைப்புகளை கண்டறிந்து கொள்ளுங்கள். அதற்கு,

*குறிப்பிட்ட எண் வெளிநாட்டு அழைப்பாக இருந்தால், MOM சிங்கப்பூர் எண்ணினை தவிர பிற நாட்டு எண்ணில் இருந்து அழைக்க தேவையில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

*மெசேஜிங் ஆப் மூலமாக வரும் மெசேஜ்களையும் நம்ப வேண்டாம். அத்தகைய போலி கணக்குகளின் புகைப்படம் மனிதவள அமைச்சகத்தின் லோகோ அல்லது MOM அதிகாரியின் படம் இருந்தால் கூட அது போலி தான்.

*உங்களுக்கு MOMல் இருந்து பேசுவதாக கூறப்படும் அழைப்பு ‘+’ எண், ‘+65’ ஆக இருந்தாலும் அது சிங்கப்பூரிலிருந்து வந்ததாக அர்த்தமில்லை.

இதையும் படிங்க: வற்றாத நதியே காஞ்சி போய்ட்டா? சிங்கப்பூரின் MOM வெப்சைட் மீதே கை வைத்த தில்லாலங்கடி கும்பல்… விசா செக் செய்ய போற முன்னாடி இத செக் பண்ணிக்கோங்கோ!

மேற்கூறியவாறு உங்களுக்கு சிங்கை மனிதவளத்துறையில் இருந்து அழைப்பு வந்தால் பொதுமக்கள் இந்த சிக்கலில் இருந்து தப்பிக்க பின்வருவதை ஃபாலோ செய்யுங்கள்.

*முதலில்,உஷாராக இருங்கள். அத்தகைய அழைப்பு உங்களுக்கு வந்தால், அதை புறக்கணித்து விடுங்கள்.

*பணம் அனுப்பும் ஏஜென்சிகள், வங்கிகள் அல்லது வேறு வழிகளில் அழைப்பாளருக்கு எந்தப் பணத்தையும் மாற்ற வேண்டாம்.

*பெயர், அடையாள எண், பாஸ்போர்ட், வங்கி கணக்கு அல்லது கிரெடிட் கார்டு விவரங்கள் மற்றும் OTP போன்ற உங்கள் தனிப்பட்ட தகவல்களை அழைப்பாளருக்கு வழங்க வேண்டாம்.

*MOMன் மீது மக்கள் வைத்து இருக்கும் நம்பிக்கையை குலைப்பதால், இதுபோன்ற சம்பவங்களை தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் உங்களிடம் இருந்தால், 1800 722 6688 என்ற ஊழலுக்கு எதிரான ஹாட்லைனை அழைத்து தகவல் கூறுங்கள்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts