TamilSaaga

சிங்கப்பூர் PSA நிறுவனத்தில் தற்போது Open ஆகியிருக்கும் வேலை வாய்ப்புகள்!

PSA -Port Of Singapore Authority, என்பது சிங்கப்பூரில் அமைந்துள்ள துறைமுகம். 1964-ல் சிங்கப்பூர் அரசாங்கத்தால் அமைக்கபட்ட இது 1990-ல் இருந்து ஐந்து துறைமுகங்களைக் கொண்டு இயங்கி வருது. 1965-ல காலனி ஆதிக்கத்தின் கீழ தான் முதன் முதலில் இந்த துறைமுகம் தொடங்கப்பட்டுச்சு. பிறகு 1964-ல் சிங்கப்பூர் அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்படுச்சு. 1997 அக்டோபர் 1 முதல் கார்ப்பரேட்-ஆக மாற்றப்பட்டு PSA கார்ப்பரேஷன் என்ற பெயரில் இயங்கி வருது.

இங்க துறைமுகம், அது சார்ந்த இதர சேவைகள் மற்றும் கார்கோ போன்றவை இயங்கி வருது. துறைமுகத்தில் அனைத்து விதமான கண்டெய்னர்கள் மற்றும் அதனை இயக்குவதற்கான தானியங்கி இயந்திரங்கள் போன்றவற்றை மிக நவீனமான முறையில நிறுவி இருக்காங்க.

அடுத்து குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்து பாதுகாக்கப்படும் பொருட்கள், ஆபத்தான எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான பொருட்கள் என அனைத்தையும் சேமித்து வைக்க நூற்றுக்கணக்கான கண்டெய்னர்களை PSA நிறுவனம் கொண்டுள்ளது.

மூன்றாவதாக கார்கோ சேவை. பொருட்களை ஒரு இடத்திலுருந்து மற்றொரு இடத்திற்கு கவனமாக நகர்த்தப் பயன்படும் கார்கோ சேவையும் PSA நிறுவனம் வழங்குகிறது.

மேற்கண்ட மூன்று சேவைகளும் இன்று வரை PSA கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தின் கீழ் இயங்கி வருது. உலகின் பல நாடுகளில் இருந்தும் மற்றொரு நாட்டிற்கு ஏற்றுமதி இறக்குமதி செய்வதில் துறைமுகம் தான் முக்கியப்பங்கு வகிக்கிறது. ஏராளமான கண்டெய்னர்கள் பல நாடுகளுக்கு இன்றும் வந்து சென்று கொண்டிருக்கிறது. இது போன்ற வளர்ந்து வரும் துறைகளில் உங்களின் வேலையே அமைத்துக் கொள்ள விருப்பமா!

இதோ உங்களுக்கான வாய்ப்பு! சிங்கப்பூரின் பிரதான வர்த்தக துறைமுகமான PSA கார்பரேசனில், நேரடி வேலைவாய்ப்பு தேர்வுகள் நடைபெறவுள்ளது. இதில் நேரடியாக கலந்துகொள்ளலாம்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:

PSA Alongside
Level 3 Function Room,
5 Harbour Drive,
Singapore-117353

நாள்: 29-05-2024
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
வேலை: Technical Specialist

NITE அல்லது Higher NITE சான்றிதழ் பெற்றவர்கள் மற்றும் டிப்ளமா முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

ஒருவேளை மேற்கண்ட சான்றிதழ்கள் எதுவும் இன்றி குறிப்பிட்ட வேலையில் அனுபவம் இருந்தால் அவர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான நேர்முகத்தேர்வு விவரங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு Joining Bonus உண்டு!

இந்த வேலைவாய்ப்பு பல பிரிவுகளில் உள்ளது.

1. Technical Specialist in Quality Management
2. Technical Specialist in Digital Systems
3. Technical Specialist in Electrical Network
4. Technical Specialist in Digital Systems at Card Repair Section
5. Technical Specialist in Equipment Engineering

1. Technical Specialist in Quality Management – கண்டெய்னர்களை நகர்த்தப் பயன்படும் கிரேன்களில் NDT எனப்படும் Non Destructive Test செய்து அதன் முடிவுகளைப் பதிவு செய்வதே இந்த பனியின் கடமையாகும். இது கிரேன்களை சரிவர பராமரிப்புக்கு உட்படுத்த உதவும்.

https://psacareers.singaporepsa.com/cw/en/job/493492/seniortechnical-specialist-quality-management-with-joining-bonus

2. Technical Specialist in Digital Systems at Card Repair Section – Electronics & communication equipment-களை சரி செய்ய பொறியாளர்களுக்கு உதவுவதே இந்த பணியின் கடமையாகும். பழுதாகியுள்ள எலெக்ட்ரானிக்ஸ் PCB போர்டுகளை சரிசெய்து மீண்டும் பொருத்த வேண்டும்.

https://psacareers.singaporepsa.com/cw/en/job/493447/technical-specialist-digital-systems-card-repair-section-with-joining-bonus

3.Technical Specialist in Electrical Network – துறைமுகத்தில் இருக்கும் உயர்மின்னழுத்தம் கொண்ட Switchgear, transformer மற்றும் Substation-களில் பணிபுரிவதே இந்த பணியாகும். மின்பகிர்மான வேலைகளை செய்ய LEW பொறியாளர்களுக்கு உதவுவதும் புதியதாக நிறுவப்படும் மின் சாதகங்கள் மற்றும் SCADA சார்ந்த தொழில்நுட்பங்களை ஆராய்ந்து (Commissioning) சரியான முறையில் இருப்பதை உறுதி செய்வதே இந்த வேலையின் கடமையாகும்.

https://psacareers.singaporepsa.com/cw/en/job/492992/technical-specialist-electrical-network-with-joining-bonus

4. Technical Specialist in Digital Systems – துறைமுகத்தில் பயன்படுத்தப்படும் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப சாதனங்களை பராமரிக்கும் பணியே இந்த வேலையாகும். CCTV, Card Access, Trunk Radio, UPS போன்ற தகவல் தொழில்நுட்ப சாதனங்களை பழுது நீக்குவதும், புதியதாக நிறுவப்படும் தொழில்நுட்பங்களை கண்கணிப்பது மற்றும் அதனை நிறுவும் பணிகளில் ஈடுபடுவதும் இந்த பணியின் கடமையாகும்.

https://psacareers.singaporepsa.com/cw/en/job/492925/technical-specialist-digital-systems-with-joining-bonus

5. Technical Specialist in Equipment Engineering – துறைமுகங்களில் உள்ள Automotive, hydraulic, mechanical and electrical systems போன்ற இயந்திரங்களை பழுது பார்ப்பதும் பராமரிப்பதும் இந்த வேலையின் பொறுப்புகளாகும். மேலும் இயந்திரங்களை மேம்படுத்தும் வேளைகளில் ஈடுபடுவதும் இதன் முக்கிய கடமையாகும்.

https://psacareers.singaporepsa.com/cw/en/job/492921/technical-specialist-assistant-service-engineer-equipment-engineering-with-joining-bonus

மேற்கண்ட அனைத்து வேலைகளுக்கும் 29-05-2024 அன்று நேர்காணல் நடைபெறவுள்ளது. அது தவிர PSA-ன் அதிகாரபூர்வ இணையதளத்திலும் இதற்கான வேலைவாய்ப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

• அதில் சென்று முதலில் உங்களுக்கான கணக்கைத் துவங்க வேண்டும்.
• பின்னர் Career என்ற பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள வேலை வாய்ப்புகளுள் உங்களுக்கானதை தேர்ந்தெடுக்க வேண்டும்.

https://psacareers.singaporepsa.com/cw/en/filter/?job-mail-subscribe-privacy=agree&search-keyword=&category=engineering&job-sector=non-executive

•     வலது பக்கத்தில் உங்கள் வசதிக்காக Filter Option கொடுக்கப்பட்டிருக்கும். அதனைப் பயன்படுத்தி வேலைவாய்ப்புகளைத் தேடலாம்.
•     வேலையைத் தேர்ந்தெடுத்ததும் உள்ளே கொடுக்கப்பட்டிருக்கும் வேலையின் பொறுப்புகள், அதற்கான கல்வித்தகுதி மற்றும் மேலும் விபரங்களை படித்து அறிந்துகொள்ளுங்கள்.
•      பின்னர் Apply Now என்ற பொத்தானை அழுத்தி அதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை உள்ளீடு செய்து உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

மேலும் வேலை வாய்ப்புகளை எப்படி அணுகுவது. உங்களுக்கான வேலை விண்ணப்பங்களை எப்படி சரியான விதத்தில் சமர்ப்பிப்பது போன்ற விரிவான தகவல்கள் நமது தமிழ் சாகா பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி பதிவினை படித்து அறிந்துகொள்ளுங்கள்!

https://tamilsaaga.com/news/how-to-apply-for-a-job-effectively/

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts