TamilSaaga

‘சிங்கப்பூரில் உணவகங்களில் உணவருந்த எத்தனை குழந்தைகளை அழைத்து வரலாம்?’ – ஒரு Detailed ரிப்போர்ட்

சிங்கப்பூரில் ஈரச்சந்தைகள் மற்றும் KTV குழுமம் வாயிலாக மீண்டும் தொற்று எண்ணிக்கை என்பது அதிகரித்து வருகின்றது. நேற்று (ஜூலை 18) ஒரே நாளில் சுமார் 85க்கும் அதிகமான புதிய தொற்றுகள் சிங்கப்பூரில் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு சுகாதார அமைச்சகம் சிங்கப்பூரில் ஏற்கனவே அமலில் இருந்த சில கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக்க முடிவு செய்தது. இந்நிலையில் அந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றது. மேலும் இந்த கட்டுப்பாடுகள் வரும் ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி வரை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உணவகங்களில் அமலுக்கு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகளில், குழந்தைகளின் அளவு குறித்து இந்த பதிவில் காணலாம்.

உணவகங்களில் முறையான பாதுகாவலருடன் எத்தனை குழந்தைகள் பங்கேற்கலாம்?

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ஒன்றாக கூடி உணவகங்களில் உணவருந்தும்போது அவர்களுடன் 12 அல்லது அதற்கு கீழ் வயதுடைய 4 குழந்தைகள் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணலாம். கட்டாயம் குழந்தைகள் உரிய பாதுகாவலர்களோடு வரவேண்டும்.

வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்த இருவர் உணவருந்த வரும்போது அவர்களுடன் 12 அல்லது அதற்கு கீழ் வயதுடைய 1 குழந்தை ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணலாம்.

வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்த இருவர் உணவருந்த வரும்போது அவர்களுடன் 12 அல்லது அதற்கு கீழ் வயதுடைய 2 குழந்தைகள் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணலாம்.

வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்த மூவர் உணவருந்த வரும்போது அவர்களுடன் 12 அல்லது அதற்கு கீழ் வயதுடைய 1 குழந்தை ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணலாம்.

அடுத்தபடியாக வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்த நால்வர் உணவருந்த வரும்போது அவர்களுடன் 12 அல்லது அதற்கு கீழ் வயதுடைய 2 குழந்தைகள் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணலாம்.

மேலும் வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்த ஐவர் உணவருந்த வரும்போது அவர்களுடன் 12 அல்லது அதற்கு கீழ் வயதுடைய 2 குழந்தைகள் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணலாம்.

Related posts