TamilSaaga

அந்த “முக்கிய” ஆவணம் இருந்தால் 5 பேர் வரை உணவகத்தில் ஒன்றாக உணவருந்தலாம் – முழு விவரம்

சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக மீண்டும் தொற்றின் அளவு என்பது சற்று உயர்ந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக அண்மையில் விஸ்வரூபம் எடுத்த KTV குழும கிளஸ்ட்டர் பெரிய அளவில் கொரோனா தொற்று எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் இன்று முதல் சில புதிய கட்டுப்பாடுகள் சிங்கப்பூரில் அமலுக்கு வருகின்றது. இந்நிலையில் அமலுக்கு வந்துள்ள அந்த கட்டுப்பாடுகளை தற்போது காணலாம்.

உணவாக மற்றும் பானக் கடை உரிமையாளர்களுக்கான கட்டுப்பாடு.

சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் உணவகங்கள் மற்றும் பான கடைகளுக்கு, உணவருந்த வருபவர்களுக்கு அவர்களுடைய தடுப்பூசி நிலைப்பாட்டை (Vaccine Status) அறியக்கூடிய திறன் இருக்க வேண்டும்.

அப்படி கடைக்கு வருபவர்களின் தடுப்பூசி நிலைப்பாட்டை அறியும் வசதி அந்த கடையில் இல்லாதபட்சத்தில் அந்த உணவு மற்றும் பானக்கடைகள் இயங்கக்கூடாது. மேலும் மக்களின் தடுப்பூசி நிலைப்பாட்டை அறியும் வசதி உள்ள உணவகம் மற்றும் பானக்கடைகள் கீழ் வரும் விதிகளை பின்பற்றி இயங்கலாம்.

உணவு உண்பவர்களுக்கான கட்டுப்பாடு.

உணவு உண்ண வருபவர்கள் இருவராக மட்டுமே அமர்ந்து உணவு உண்ண வேண்டும்.

3 அல்லது 5 பேர் குழுவாக அமைர்ந்து உணவு உண்ண வேண்டிய நிலை ஏற்பட்டால், அவர்களிடம் கொரோனா நெகடிவ் சான்றிதழ் அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் இருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

Related posts