TamilSaaga

பணிப்பெண்களின் மருத்துவப் பரிசோதனை : இனி முதலாளிகளுக்கு அனுமதி இல்லை – தெளிவுபடுத்திய MOM

சிங்கப்பூரில் அதிகார துஷ்பிரயோகத்தைக் கண்டறிய உதவும் புதிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, முதலாளிகள் தங்கள் பணிப்பெண்ணின் ஆறு மாத மருத்துவப் பரிசோதனையின் போது அவர்களுடன் இருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று மனிதவள அமைச்சகம் (MOM) இன்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 5) தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் ஆகஸ்ட் 29ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு ஊடக அறிக்கையில், MOM வெளியிட்ட தகவலின்படி முதலாளிகள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் இல்லாமல் “புலம்பெயர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு உதவி தேவைப்பட்டால் பேசுவதற்கு பாதுகாப்பான சூழலை வழங்க” சோதனை நடத்தப்படும் என்று கூறினார்.

தற்போது, ​​கர்ப்பம் மற்றும் சிபிலிஸ், எச்.ஐ.வி மற்றும் காசநோய் போன்ற தொற்று நோய்களுக்கான பரிசோதனைகள் மட்டுமே நடத்தப்படுகிறது. மேலும் புதிய நடவடிக்கைகளாக பணிப்பெண்ணின் எடை மற்றும் உயரத்தை அவர்களது உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) கணக்கிடுதல் ஆகியவை கணக்கிடப்படுகிறது.

மேலும் “சந்தேகத்திற்கிடமான மற்றும் விவரிக்கப்படாத காயங்களின்” அறிகுறிகளையும் மருத்துவர்கள் பரிசோதிப்பார்கள். இறுதியாக, சோதனை முடிவுகளைப் பொருட்படுத்தாமல் அனைத்து ஆறு மாத மருத்துவ பரிசோதனை படிவங்களையும் எம்ஓஎம்-க்கு சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.

Related posts