TamilSaaga

சிங்கப்பூரில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடு.. எதற்கு அனுமதி – எதற்கு அனுமதி இல்லை – முழு விவரம்

கொரோனா பரவல் காரணமாக சிங்கப்பூரில் மீண்டும் சில கட்டுப்பாடுகளை அரசு இன்று முதல் அமலுக்கு கொண்டு வருகின்றது. மேலும் இந்த கட்டுப்பாடுகள் இன்று (ஜூலை 19) தொடங்கி வரும் ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி வரை அமலில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எவற்றுக்கு அனுமதி உண்டு..

இருவர் அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட ஐவர் ஒன்றாக அமர்ந்து உணவகங்களில் உணவு உண்ணலாம்.

உட்புற உடற்பயிற்சி நிகழ்வுகளில் இருவர் அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட ஐவர் ஒரு குழுவாக உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

கல்வி நிலையங்களில் ஏற்கனவே குறிப்பிட்ட அளவை போல, 5 பேர் கொண்ட குழுவாக ஒரு ஆசிரியரோடு 30 பேர் வரை கூடலாம்.

எவற்றுக்கு அனுமதி இல்லை..

இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நிலையில் 5 பேர் வரை ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணவும், உடற்பயிற்சி கூடங்களில் பயிற்சி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தடை காலத்தில் இரவு நேர கேளிக்கை விடுதிகள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

குறிப்பு :

இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட 2 வாரங்களுக்கு பின்னரே அவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றவர்கள் என்று கருதப்படுவர்.

Positron emission tomography scan எனப்படும் PET சோதனை முடிவுகளோடு உணவகங்களுக்கு வருபவர்கள், உணவு உண்ண வருவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக அந்த சோதனையை மேற்கொண்டிருக்க வேண்டும்.

Related posts